பெரம்பலூரில், 20 இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசாரின் பாதுகாப்பையும் மீறி 14 பவுன், ரூ. 12 ஆயிரம் கொள்ளை!

schedule
2021-12-14 | 06:45h
update
2021-12-14 | 06:46h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

In Perambalur, the violating security at 20 locations ; 14 Pouds and 12 thousand robbery !

பெரம்பலூர் 4 ரோடு அருகே உள்ள மின்நகர், 2வது குறுக்கு தெருவில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் கதிர்வேல் மனைவி விஜயலட்சுமி (45), தனது கணவர் கதிர்வேல், மகன் புண்ணியமூர்த்தியுடன் கடந்த இரண்டு வருடங்களாக வசித்து வருகின்றனர். புண்ணியமூர்த்தி சென்னையில் அப்ரண்டிசாக பணிபுரிந்து வருகிறார். விஜயலட்சுமியும், அவரது கணவரும் சங்கராபுரத்தில் உள்ள அவரது அக்கா வீட்டு சென்றுள்ளனர்.

Advertisement

இந்நிலையில் இன்று காலை 6.30 மணி அளவில் விஜயலட்சுமி வீட்டின் கிரில் மற்றும் முன் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை பார்த்து, அவருக்கு போன் மூலம் தகவல் அக்கம் பக்கத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர். விஜயலட்சுமி உடனே செல்வம் நகரில் வசிக்கும் தனது தம்பி சுரேஷ்க்கு தகவல் தெரிவித்துள்ளார். சுரேஷ் வந்து பார்த்தபோது கதவுகளின் பூட்டுகள் மற்றும் பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த நகைகள் மற்றும் பணம் கொள்ளை போனது தெரிய வந்துள்ளது. இது குறித்து பெரம்பபலூர் போலீசாருக்கு கொடுத்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு தடய அறிவியல் நிபுணர்களுடன் வந்த போலீசார் கொள்ளையர்களை அடையாளம் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

தங்கசங்கிலி, மோதிரம், தோடு, ஜிமிக்கி, என மொத்தம் 15 பவுன் தங்கநகைகள், ரொக்கம் ரூ. 12 ஆயிரம் கொள்ளை போனது தெரியவந்தது. மேலும், கொள்ளை நடந்த இரவில் 20 இடங்களில் போலீசார் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் ஏந்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
12.06.2026 - 19:13:15
Privacy-Data & cookie usage: