In Perambalur timeout food items in stores near the authorities destroyed
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வேப்பூர் கிராமத்தில், பெரம்பலூர் மாவட்ட உணவு பொருள் பாதுகாப்பு பிரிவு நியமன அலுவலர் டாக்டர். வெங்கடேசன் தலைமையில் அரசு கல்லூரி மாணவியர் விடுதி, சத்துணவு மையம், அங்கன்வாடி மையம், தனியார் உணவகம், டீ கடை , மளிகை கடை ஆகியவற்றில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வில், அனைத்து வித குளிர்பானங்கள், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், அடைக்கப்பட்ட குடிநீர் மற்றும் உணவு பொருட்கள் என 11 ஆயிரம் மதிப்பிலான காலவதியான பொருட்களை கண்டறிந்து அழித்தனர்.
ஆய்வின் போது உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அழகுவேல், சின்னமுத்து, லெட்சுமண பெருமாள், ரத்தினம், ரவி, உட்பட பலர் உடனிருந்தனர்
மேலும், கடைகளில் தடை செய்யபட்ட புகையிலை மற்றும் காலாவதியான பொருட்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி எச்சரிக்கையும் விதிக்கப்பட்டது. காலவதியான பொருட்கள் கைபற்றப்பட்டு அதிகாரிகள் முன்னிலையில் அழிக்கப்பட்டது. மேலும் இது போன்ற நடவடிக்கைகள் குன்னம் பகுதியில்தொடர்ந்து நடைபெறும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.