In Perambalur to beg near the farmers struggle to cut the amount due to demand sugarcane 2nd day standby

perambalur-sugarcane-farners-2nday-protest-in-eraiur பெரம்பலூர் அருகே எறையூரில் இயங்கி வரும் அரசுக்கு சொந்தமான பொதுத்துறை சர்க்கரை ஆலையில் கடந்த அரவை பருவத்திற்கு வெட்டிய கரும்புக்குரிய நிலுவைத்தொகை ரூ. 52 கோடியை வழங்க கோரி விவசாயிகள் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ஏ.கே ராஜேந்திரன் தலைமையில் காத்திருப்பு போராட்டம் நேற்று தொடங்கினர்.

இரண்டாம் நாளான இன்று அரை நிர்வாணத்தில் பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தினர். விவசாயிகளும், விவசாய சங்கங்களும் மாவட்ட ஆட்சியரின் விவசாயிகள் குறைத் தீர்க்கும் கூட்டம் மற்றும் அரசின் காதிற்கு கேட்கும் வகையில் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியும் இதுவரை எந்த வித பயனில்லை. அதனால் விரக்கி அடைந்த விவசாயிகள் தீபாவளி செலவிற்காக வெட்டிய கரும்பிற்கான பணத்தை வழங்க கோரி ஆலையினுள்ளேயே பந்தல் அமைத்து தங்கி காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஆலை நிர்வாகம் வெட்டிய கரும்பிற்கு உரிய பணத்தை உரிய காலத்தில் வழங்காமல் காலம் தாழ்த்தி, வருவதை கண்டித்து போரட்டத்தின் தொடர்ச்சியான 2வது நாளான இன்று பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தினர்.

ஆனால், விவசாயிகள் ஆலைக்குள்ளேயே இரவு பகலாக தங்கி 2 ஆம் நாளாக இன்று போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். அரசே நாணயமற்று நடந்து கொண்டால், பிறரை சொல்லவா வேண்டும் என அப்பகுதி மக்கள் விவாசயிகளை பார்த்து பரிதாபபட்டனர்.


Copyright 2015 - © 2022 — Kaalaimalar | காலைமலர் . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!