ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க கோரி பெரம்பலூரில் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்!

schedule
2017-01-17 | 14:29h
update
2026-06-27 | 21:33h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

In Perambalur to grant permission to Jallikatu hold the demonstration in jallikattu supporters

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் பாலக்கரை பகுதியில் இளைஞர்கள் உள்ளிட்ட ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் 300க்கும் மேற்ப்பட்டடோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த உச்ச நீதிமன்றம் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தடை விதித்துள்ளதால், ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி சென்னை உட்பட மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் மாணவர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் அமைதி வழி போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement

இதன் ஒரு பகுதியாக ஜல்லிக்கட்டு மீதான தடைய நீக்க வேண்டும், பீட்டா அமைப்பை தடைய செய்ய வேண்டும், அலங்காநல்லூரில் கைது செய்யப்பட்டவர்கள் மீது எவ்வித நடவடிக்கைககளையும் மேற்கொள்ள கூடாது, ஜல்லிக்கட்டுகென தனி சட்டம் இயற்ற வேண்டும் என வலியுறுத்தி பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் பாலக்கரை பகுதியில் சிறுவர், சிறுமியர், பெண்கள், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் உள்ளிட்ட ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் என 300க்கும் மேற்ப்பட்டோர் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான வாசங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின் போது பாதுகாப்பிற்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
27.06.2026 - 21:33:17
Privacy-Data & cookie usage: