பொங்கல் போனஸ் வழங்க கோரி பெரம்பலூரில் சாலைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

schedule
2017-01-12 | 14:54h
update
2026-06-25 | 17:55h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

In Perambalur to grant Pongal bonuses to employees in the TNHREA demonstrated

அரசு உத்தரவுப்படி பொங்கல் போனஸ் வழங்கக் கோரி பெரம்பலூரில் சாலைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பெரம்பலூர் துறைமங்கலத்தில் உள்ள நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளர் அலுவலகம் முன்பு, மாவட்டத் தலைவர் முத்து தலைமையில் இன்று மாலை நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர்கள், அரசாணை (6 – 11.01.2017) ப்படி பொங்கல் போனஸ் வழங்க கோரி மாலை நேர ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதில் ஏரளாமான சாலைப்பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement

மாவட்டத் துனைத்தலைவர் ராஜா, மாவட்ட இணைச் செயலாளர் கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் மகேந்திரன், துவக்க உரையாற்றினார். மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன் கோரிக்கை விளக்கவுரை ஆற்றினார். மாநில செயற்குழு உறுப்பினர் மகாதேவன், நிறைவுரை நிகழ்த்தினார். முன்னதாக, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் ஆளவந்தார் வாழ்த்துரை வழங்கினார். மாவட்ட பொருளாளர் சுப்பிரமணியன் நன்றி கூறினார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
25.06.2026 - 17:55:16
Privacy-Data & cookie usage: