பெரம்பலூர் அருகே அரசுப்பேருந்து மீது இரு ஆம்னி பேருந்துகள் மோதி விபத்து: 34 பேர் காயம்

schedule
2017-01-12 | 16:56h
update
2026-09-19 | 20:11h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

In Perambalur Two Omni buses collide near the bus accident on: 34 injured

பெரம்பலூர் அருகே அரசுப்பேருந்து மீது அடுத்தடுத்து இரு தனியார் ஆம்னி பேருந்துகள் மோதி ஏற்பட்ட விபத்தில் 34 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையிலிருந்து 50க்கும் மேற்ப்பட்ட பயணிகளுடன் திருநெல்வேலி நோக்கி வந்த சென்ற அரசுப்பேருந்து இன்று அதிகாலை பெரம்பலூர் அருகே உள்ள திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுவாச்சூர் என்ற இடத்தில் சாலையில் இருந்த தடுப்பு பலகையை கடந்து செல்ல பிரேக்கை இயக்கியதில் வேகம் குறைந்துள்ளது. இதனிடையே அரசுப்பேருந்தை தொடர்ந்து பின்னால் அதிவேகமாக பாண்டிச்சேரி மற்றும் மேல்மருவத்தூரில் இருந்து வந்த இரு ஆம்னி பேருந்துகளும் கட்டுப்பாட்டை இழந்து அடுத்தடுத்து அரசுப்பேருந்தின் மீது மோதியது. இதில் கரூரைச்சேர்ந்த நிஷாந்தி, மணிமேகலை, மீனாட்சி, புனிதா ஈஸ்வரி, லட்சுமி உட்பட 14 பேர் படுகாயமடைந்து உள்நோயளிகளாகவும், ஜெயக்கொடி, செல்வி, சசிரேகா உட்பட 20 பேர் லேசான காயமடைந்து வெளிநோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisement

இதுகுறித்து பெரம்பலூர் போலீசார் வழக்கு பதிந்து பேருந்து ஓட்டுநர்கள் மூன்று பேரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனடையே அதிகாலை நேரத்தில் நிகழ்ந்த திடீர் சாலை விபத்தினால் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
19.09.2026 - 20:11:58
Privacy-Data & cookie usage: