பெரம்பலூர் அருகே மர்ம நபர்கள் துணிகரம் : பெண்ணை தாக்கி 5 பவுன் நகை பறிப்பு

schedule
2016-10-02 | 17:43h
update
2026-06-04 | 13:53h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

In Perambalur unidentified persons near the presumptuous: 5 pounds, attacked the woman sleeps at work in the fields of jewelry flush tiredness

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், செட்டிக்குளத்தை சேர்ந்தவர் மதியழகன் (60) விவசாயி. இவரது மனைவி செல்வி ( 55) இவர் நேற்று மாலை செட்டிகுளத்தில் இருந்து பெரகம்பி செல்லும் சாலையில் தன்னுடைய வயலில் வேலை செய்த களைப்பில் படுத்து தூங்கி கொண்டு இருந்தார். அப்போது அவ்வழியாக வந்த மர்ம நபர்கள் செல்வியின் தலையில் கட்டையால் தாக்கி 5 பவுன் நகையை பறித்து கொண்டு தப்பி விட்டனர்.

Advertisement

இதில் செல்வியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. வலி தாங்க முடியாத செல்வி அலறினார். சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் பெரம்பலூர் மருத்துவமனையில் சிகிச்சைக்கா சேர்த்தனர். இச் சம்பவம் குறித்து பாடாலூர் காவல் நிலையத்தினர் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
04.06.2026 - 13:53:57
Privacy-Data & cookie usage: