பெரம்பலூர் அருகே விபத்து : கடலூரை சேர்ந்த நாடக கலைஞர் பலி!

schedule
2017-04-10 | 19:03h
update
2026-06-24 | 23:34h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

In Perambalur will near the accident : sacrifice of the caddalore a drama artist!

பெரம்பலூர் அருகே சற்று முன் ஏற்பட்ட சாலை விபத்தில் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த நாடக கலைஞர் கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

Advertisement

கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே உள்ள சிறுமுளை கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி, வயது 65. இன்று பெரம்பலூர் அருகே உள்ள மங்கலமேடு பகுதியில் நடந்த திருவிழாவில் நாடகம் நிகழ்த்தி விட்டு சொந்த ஊரான சிறுமுளைக்கு திரும்பி கொண்டிருந்தவர், மங்கலமேடு பேருந்து நிறுத்தத்தை அடைவதற்காக திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது அவ்வழியாக வந்த கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலத்த காயமடைந்து உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த மங்கலமேடு போலீசார், பெரியசாமியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக பெரம்பலூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காரை ஓட்டி வந்த ஓட்டுனர் சென்னையை சேர்ந்த பாலாஜி என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
24.06.2026 - 23:35:00
Privacy-Data & cookie usage: