பெரம்பலூர் : பெண்களுக்கான உணவு பதப்படுத்துதல், பேக்கரி பொருட்கள் தயாரித்தல் இலவச பயிற்சி

schedule
2016-08-26 | 13:59h
update
2026-06-25 | 16:56h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

In Perambalur: Women for food processing, bakery products preparation Free Training பெரம்பலூரில் உள்ள ஐஓபி (IOB) கிராமிய சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையத்தின் இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கை:

மேற்கண்ட பயிற்சி மையத்தில் 2016ம் வருடம் செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் பெண்களுக்கான உணவு பதப்படுத்துதல் மற்றும் பேக்கரி பொருட்கள் தயாரித்தல் பயிற்சி இலவசமாக அளிக்கப் படுகிறது.

இதற்கு உண்டான தகுதி, வயது 18க்கு மேல் மற்றும் 40க்கு குறைவாக இருத்தல் வேண்டும். குறைந்த பட்சம் 8ஆம் வகுப்பு படித்தவராக இருத்தல் வேண்டும். பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருத்தல் வேண்டும். சுய தொழில் தொடங்குவதில் ஆர்வம் உள்ள பெண்கள் விண்ணப்பிக்கவும்.

Advertisement

இந்தப் பயிற்சி தொடர்ந்து 15 நாட்கள் நடைபெறும். இந்த பயிற்சியில் அனைத்து விதமான உணவு பதப்படுத்துதல் முறைகளும், பேக்கரி பொருட்கள் தயாரித்தல் முறைகளும் சிறந்த முறையில் பயிற்சி அளிக்கப்படும்.

பயிற்சி நேரம் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை. பயிற்சி காலத்தில் மதிய உணவு இலவசமாக வழங்கப்படும். பயிற்சி முடித்தவுடன் இப்பயிற்சியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். இந்த சான்றிதழ் அரசால் அங்கீகரிக்கப் பட்டதாகும்.

விருப்பம் உள்ளவர்கள் பெரம்பலூர் மதனகோபாலபுரத்தில் உள்ள ஐஓபி வங்கியின் முதல் மாடியில் உள்ள (IOB) கிராமிய சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையத்தின் இயக்குனரிடம் தங்களது பெயர், வயது, விலாசம், கல்வித்தகுதி ஆகியவற்றை குறிப்பிட்டு விண்ணப்பிக்கவும்.

குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பள்ளியின் மாற்றுச் சான்றிதழ் (TRANSFER CERTIFICATE) ஆகியற்றின் நகல், நான்கு பாஸ்போர்ட் அளவு, ஒரு ஸ்டாம்ப் அளவு போட்டோ ஆகியவற்றையும் விண்ணப்பத்துடன் இணைத்து ஆகஸ்ட் மாதம் 30ம் தேதிக்குள் அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

30ம் தேதி நடக்கவிருக்கும் நேர்முக தேர்வு மற்றும் நுழைவு தேர்வில் பங்கு பெற்று தேர்ச்சி பெறுபவர்களுக்கு பயிற்சிக்கு அனுமதி வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு ஐஓபி கிராமிய சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையம், ஷெரீஃப் காம்ப்ளக்ஸ், முதல்மாடி, மதனகோபாலபுரம், பெரம்பலூர் – 621212 என்ற முகவரியிலோ அல்லது 04328 277896 என்ற தொலைப்பேசி மூலமாகவோ தொடர்புக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
25.06.2026 - 16:57:09
Privacy-Data & cookie usage: