பெரம்பலூர் அருகே தேசிய ஊரக வேலை திட்டத்தில் சரியாக பணி வழங்காததை கண்டித்து சாலை மறியல்

schedule
2016-10-27 | 20:47h
update
2026-06-27 | 14:46h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

In Perambalur work program at the MNRGEural road blockade to protest that did not work properly

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், சித்தளி கிராமத்தில் உள்ள 3 வது வார்டு மக்களுக்கு, கடந்த 5 மாதங்களாக தேசிய ஊரக வேலை திட்டத்தில் வேலை கொடுக்கவில்லை என கூறி இன்று காலை திடீரென நடைபெற்று வரும் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் முறையாக பணியும் முறையாக ஊதியம் வழங்கவேண்டும் என வலியுறுத்தி 150க்கும் மேற்பட்டோர் பெரம்பலூர் – அரியலூர் மாநில நெடுஞ் சாலையில் திடீரென சாலை மறியல் ஈடுபட்டனர்.

Advertisement

இது குறித்து தகவல் அறிந்த வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாரதிதாசன், முரளிதரன் , கிராம நிர்வாக அலுவலர் அகிலன், மருவத்தூர் போலீசார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சு வார்த்தையில் அனைவருக்கும் முறையான பணியும், முறையான ஊதியமும் வழங்கப்படும் என உறுதியளித்ததை தெடர்ந்து சாலை மறியலை மக்கள் கைவிட்டனர் இந்த சாலை மறியலால் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
27.06.2026 - 14:47:02
Privacy-Data & cookie usage: