In Perambalur, youth congress membership camp!

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள அரசன் ஹோட்டலில் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது.

பெரம்பலூர் இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் பழனிச்சாமி வரவேற்றார். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினரும், காங்கிரஸ் மேலிட பொறுப்பாளருமான ஜான் அசோக் வரதராஜன் முன்னிலை வகித்தார்.

மாநிலப் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் த. தமிழ்ச்செல்வன் வாழ்த்துரை வழங்கினார். தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநிலத்தலைவர் விச்சு லெனின் பிரசாத் தலைமையுரை நிகழ்த்தினார். பின்னர் புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது. காங்கிரஸ் மாவட்ட தலைவர் சுரேஷ், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில செயலாளர் துரை.ராஜீவ்காந்நி உள்பட பலர் கலந்து கொண்டனர். குன்னம் சட்டமன்ற இளைஞர் காங்கிரஸ் தலைவர் பார்த்திபன் நன்றி கூறினார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!