In Poolambadi, Malaysian businessman Dato PRAKADEESH KUMAR request the Minister and MLA, to set up a government polytechnic, ITI.

பெரம்பலூர் மாவட்டம், பூலாம்பாடியை சேர்ந்தவர் டத்தோ.பிரதீஸ்குமார் (DATO. PRAKADEESH KUMAR MD., PLUS MAX Group of Companies). இவர் மலேசிய உள்ளிட்ட பல நாடுகளில் வணிகம் செய்து வருகிறார். பூலாம்பாடியில் உள்ள அரசு பள்ளியில் படித்த அவர், அந்த ஊருக்கு பெருமை சேர்க்கும் வகையிலும், அவர் படித்த அரசு பள்ளியில் படித்து அதிக மதிப்பெண் பெறும் 3 மாணவர்களை அவருக்கு சொந்தமாக உள்ள சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே உள்ள தேவியாக்குறிச்சி கல்லூரியில், இலவசமாக படிக்க வைத்து வருகிறார். மேலும், அவ்வூறுக்கு 5 வழித்தடத்தில் புதிய பேருந்துகளை அரசிடம் கோரிக்கை வைத்து இயக்க வைத்தார். பலருக்கு பல உதவிகளை செய்து சமூக பணியில் பங்கெடுத்து கொள்கிறார். அவரது பிறந்த நாளை முன்னிட்டு, அவரை சந்தித்த பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், மற்றும் எம்.எல்.ஏ பிரபாகரனிடம், பூலாம்பாடிக்கு அரசு பாலிடெக்னிக், மற்றும் ஐ.டி.ஐ அமைத்து தர கோரிக்கை விடுத்துள்ளர். பூலாம்பாடி மற்றும் கள்ளப்பட்டி, கடம்பூர், பெரியம்மாபாளையம், வேப்படி, பாலக்காடு, அரசரடி, மேலக்குணங்குடி ஆகிய பகுதிகள் பின்தங்கிய பகுதிகளாக இருப்பதோடு, மாவட்டத்தின் கடைகோடி எல்லையிலும், பச்சைமலைத் தொடரிலும் அமைந்துள்ளது. அதனால், மாணவர்கள், பாலிடெக்னிக், ஐ.டி.ஐ கல்வி பயில, வேறு ஊர்களுக்கு பஸ்கள் மாறி செல்ல வேண்டி உள்ளது.வேலை வாய்ப்பு மிக்க பாலிடெக்னிக், ஐ.டி.ஐ தொடங்கினால், உள் மற்றும் வெளிநாடுகளில் இளைஞர்கள் அதிக அளவில் வேலை வாய்ப்பை தொழில் துறையில் பெறுவார்கள். மேலும், உடும்பியம், அரும்பாவூர், தழுதாழை, தொண்டைமாந்துறை, அ.மேட்டூர், மலையாளப்பட்டி, விஜயபுரம், கிருஷ்ணாபுரம், வெங்கனூர் கிராங்மகளை சேர்ந்தவர்களும், சேலம் மாவட்டத்தை சேர்ந்த வீரகனூர், நல்லூர், லத்துவாடி, கவர்பனை கிராம மக்களும் அதிக அளவில் கல்வக் கற்று பயன்பெறுவார்கள் என தெரிவித்த அவர், அரசு பாலிடெக்னிக், ஐ.டி.ஐ கொண்டு வந்து உதவிட வேண்டுமென கோரிக்கை விடுத்து கேட்டுக் கொண்டார். மேலும், குற்றங்களை கண்காணிக் காவல் துறையினருக்கு 13 சி.சி.டி.வி கேமரா வழங்கவும் ஏற்பாடு செய்தார். கொரோனா காலத்தில், மலேசியா மற்றும் தமிழகத்தில் சிக்கித் தவித்தவர்களை தனது சொந்த செலவில், விமானங்கள் மூலம் அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!