in Tapioca integrated pest and disease management Free Training Camp

நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையம் வெளியிட்டுள்ள தகவல்:

நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் வரும் 29ம் தேதி செவ்வாய்க் கிழமை காலை 9மணிக்கு மரவள்ளி ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மை என்ற தலைப்பில் ஒரு நாள் இலவசப் பயிற்சி முகாம் நடைபெறுகிறது.

இப்பயிற்சி முகாமில் மரவள்ளி ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மை, மரவள்ளியில் உள்ள உயர் ரகங்கள், நடும் பருவம், நடவு முறைகள், விரைவு பயிர் பெருக்கமுறை, நடவுக்கு ஏற்ற குச்சிகள் மற்றும் கரணை தேர்வு, சொட்டு நீர்ப்பாசனம், உர நிர்வாகம், களை நிர்வாகம், ஊட்டச்சத்து குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் முறைகள் மரவள்ளி ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் நிர்வாக மேலாண்மை முறைகள் குறித்த தொழில்நுட்பங்கள் விரிவாகக் எடுத்துரைக்கப்படும்.

இப்பயிற்சியில் விவசாயிகள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள் மற்றும் ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்.விருப்பமுள்ளவர்கள் நாமக்கல்வேளாண்மை அறிவியல் நிலையத்திற்கு நேரில் வந்தோ அல்லது தொலைபேசி மூலமாகவோ வரும் 29 காலை 9மணிக்குள் பெயரை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.

பயிற்சிக்கு பதிவு செய்வதில் நாமக்கல் மாவட்ட விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மேலும் பயிற்சிக்கு வரும் விவசாயிகள் தங்களுடைய ஆதார் எண்னை கண்டிப்பாக பதிவு செய்யவேண்டும் என தெரிவித்துள்ளார்.

Tags:

Copyright 2015 - © 2020 — Kaalaimalar | காலைமலர் . All Rights Reserved | NEWS : kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for Tamil Daily News -Kalaimalar.

error: Content is protected !!