In the 2nd phase of 13 crore rupees for the prosperity of the hometown, Rs. 60.25 lakhs was donated by international businessman DATO S PRAKADEESH KUMAR MD., PLUS MAX Group of Companies.

பூலாம்பாடி பேரூராட்சியில்  நமக்கு நாமே திட்டத்தின் கீழ் அடிப்படை  கட்டமைப்பு  வசதிபணிகளை மேற்கொள்வதற்காக டத்தோ எஸ். பிரகதீஸ்குமார், இரண்டாம் கட்ட நிதியாக 60 லட்ச ரூபாய்க்கான டிடயுயை வழங்கினார்.

பெரம்பலூர் மாவட்டம், பூலாம்பாடி பேரூராட்சிக்கு,  நமக்கு நாமே திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகளுக்காக பன்னாட்டு, தொழிலதிபர் டத்தோ எஸ். பிரகதீஸ்குமார் கடந்த ஆகஸ்ட் 12-ந்தேதி முதற்கட்ட பங்களிப்பு தொகையாக 90 லட்ச ரூபாய்க்கான டிடி -ஐ அவரது ப்ளஸ் மேக்ஸ் ஹெல்த் கேர் பவுண்டேசன் சார்பில்  வழங்கிருந்த நிலையில், இன்று இரண்டாம் கட்ட நிதியாக ரூபாய் 60 லட்சத்திற்கான வரைவோலைகளை வழங்கினார்..

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் பூலாம்பாடி பேரூராட்சியில், பூலாம்பாடி, கடம்பூர், புதூர், அரசடிகாடு, மேலகுணங்குடி ஆகிய பகுதிகளை உள்ளடக்கியது.

பூலாம்பாடி பேரூராட்சியில் 15 வார்டுகளில், 10ஆயித்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் பூலாம்பாடி பேரூராட்சி பகுதிகளில் சாலை வசதி, குடிநீர் வசதி, மின்விளக்கு வசதி, கழிவு நீர் கால்வாய் வசதி ஆகிய அடிப்படை வசதிகள் போதிய அளவில் இல்லாமல் உள்ளது. அதே போல் மலையடிவார பகுதியான அரசடிகாடு பகுதியில் போதிய சாலை வசதி இல்லாததால் விவசாயிகள் விளை பொருட்களை வாகனங்களில் ஏற்றிச் செல்ல மிகவும் அவதிபட்டு வருகின்றனர்.

அடிப்படை வசதி பற்றாக்குறையால் மிகவும் சிரமத்தை சந்தித்து வந்த  பொதுமக்கள், பூலாம்பாடி பேருராட்சி பகுதிகளில் அடிப்படை வசதி செய்து தருமாறு பன்னாட்டு தொழிலதிபரும் மண்ணின் மைந்தருமான டத்தோ எஸ்.பிரகதீஸ்குமாரிடம்  வேண்டுகோள் விடுத்தனர். அதன்படி பொதுமக்களின் சிரமங்களை உணர்ந்த அவர், பொதுமக்கள் பங்களிப்பு தொகையுடன் நமக்குநாமே திட்டத்தின் கீழ் அடிப்படை வசதிகள் செய்து தர ஏற்பாடு செய்தார். அதற்கான முயற்சிகளை முழுவீச்சில் ஏற்பாடு செய்த அவர், அரசு அதிகாரிகளிடம் கூறி பூலாம்பாடி பேரூராட்சியில் அனைத்து வீதிகளிலும் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கண்டறிய சொல்லி அதற்கான செலவினங்களையும் கேட்டறிந்தார்.

இதனை செய்து முடித்தால்பூலாம்பாடி பேரூராட்சி அடிப்படை வசதிகளில் தன்னிறைவு பெறும் என்பதால் ,அடிப்படை வசதிகளை நமக்குநாமே திட்டத்தின் கீழ் மொத்தம் 33 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செய்து தர முடிவு செய்யப்பட்டது. டத்தோ S பிரகதீஸ்குமாரின், ப்ளஸ்மேக்ஸ் ஹெல்த்கேர் பவுண்டேசன் நிறுவனத்தின் மூலம் 13 கோடிரூபாய் பங்களிப்பு தொகையாக தரப்படஉள்ளது.

அதிலிருந்து, பூலாம்பாடி பேரூராட்சியில் சாலைவசதி, குடிநீர் வசதி, மின்விளக்குவசதி, கழிவுநீர் கால்வாய், உயர்மட்ட பாலம் அமைத்தல், குடிநீர் கிணறு அமைத்தல் பணிகள் நடைபெற உள்ளது. முதற்கட்டமாக தொழிலதிபர் டத்தோ எஸ்.பிரகதீஸ்குமாரின் பங்களிப்பு தொகையாகஅவரது ப்ளஸ்மேக்ஸ் ஹெல்த் கேர் பவுண்டேசன் சார்பில் கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி முதற்கட்ட நிதியாக 90 லட்சரூபாய்க்கான டிடியை பேரூராட்சி செயல் அலுவலர் சிவராமனிடம் வழங்கிருந்த நிலையில்,  இரண்டாம் கட்ட நிதி வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது இதில் ரூ.60.25 லட்சத்திற்கான  காசோலையை பேரூராட்சி உதவி இயக்குனர் காளியப்பன் மற்றும் பூலாம்பாடி பேரூராட்சி செயல் அலுவலர் சிவராமனிடம் வழங்கினார்.

லப்பைக்குடிக்காடு பேரூராட்சி செயல் அலுவலர் சதீஷ்கிருஷ்ணன், அரும்பாவூர் பேரூராட்சி செயல் அலுவலர் தியாகராஜன், பூலாம்பாடி பேரூராட்சி தலைவர் பாக்கியலட்சுமி செங்குட்டுவன், கவுன்சிலர்கள் பூங்கொடிமணி, கலைச்செல்வி பாலகிருஷ்ணண், தேவிகா அருண்,மஞ்சுளா ரவி,கண்ணகி கருப்பையா, செல்வராணி ராமர், ராஜலட்சுமி செல்வக்குமார்,பர்கத்நிஷா அபதுல்ரகீம், மாணிக்கம், ராமதாஸ், சுதாகர், ஜெயந்தி பெருமாள், கஸ்தூரி வீராசாமி மற்றும் பூலாம்பாடி முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2023 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!