குடிநீர் பிரச்சனையை ஆட்சியர் நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க சிபிஎம் பேரவை கூட்டத்தில் வலியுறுத்தல்.

schedule
2017-05-10 | 18:51h
update
2026-09-23 | 16:44h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெரம்பலூர் ஆலத்தூர் வட்டக்குழு பேரவை கூட்டம் 10.5.2017 அன்று துறைமங்கலத்திலுள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

வட்ட செயலாளர் எஸ்.பி.டி.ராஜாங்கம் தலைமை வகித்தார். முன்னதாக மாவட்டக்குழு ஆர்.முருகேசன் அனைவரையும் வரவேற்றார். மாவட்ட செயலாளர் ஆர்.மணிவேல் சிறப்பு உரையாற்றினார்.

மாவட்ட செயற்குழு என்.செல்லதுரை, ஆர்.அழகர்சாமி, எ.கலையரசி, பி.ரமேஷ், மாவட்டக் குழு எ.கணேசன், பி.முத்துசாமி, பி.கிருஷ்ணசாமி, எஸ்.கே.சரவணன், சி.சண்முகம், மற்றும் கலைவாணி, வ.வசந்தா, எம்.செல்லதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

பின்னர் மாதர் சங்கம் சாதுபில் பெண் கட்சி உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. அங்கு, நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் குடிநீர் பிரச்சனை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.

நகராட்சி நிர்வாகம் முறையாக தண்ணீர் விநியோகம் செய்ய முடியாமல் திண்டாடி வருகிறது. எனவே ஆட்சியர் நேரில் ஆய்வு செய்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,

பெரம்பலூர் மாவட்டத்தில் விவசாயிகளின் மரணம் வயது முதுமை காரணமாக இறந்துள்ளனர் என கூறும் மாவட்ட நிர்வாகத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சி வட்டக்குழு கண்டனம் தெரிவிப்பதோடு விவசாயிகளின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் நிவாரணம் வழங்க அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும்,

பெரம்பலூர் நகர்ப்புற பகுதிகளில் நான்கு ரோடு முதல் பழைய பேருந்து நிலையம் வரை இரவு நேரங்களில் இயக்கப்படும் 3 பிளஸ் -1 ஆட்டோக்கள் அதிக கட்டணம் வசூலிப்பதாகவும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். எனவே இரவு நேரங்களிலும் ஷேர் ஆட்டோக்கள் இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
23.09.2026 - 16:44:16
Privacy-Data & cookie usage: