In the July 12 meeting of the TNEB official announcement of the consumer redressal

வரும் ஜூலை 12-ல் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் அதிகாரி அறிவிப்பு

electricity_line

பெரம்பலூரில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஜூலை 12 ஆம் தேதி நடைபெற உள்ளது பெரம்பலூர் கோட்ட செயற்பொறியாளர் சி. தேவராஜ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது :

பெரம்பலூர் கோட்டத்திற்கு உட்பட்ட மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மேற்பார்வைப் பொறியாளர் தலைமையில் நடைபெற உள்ளது.

இக்கூட்டம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் பெரம்பலூர் கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் ஜூலை 12 ஆம் தேதி காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறும்.

எனவே, இக்கூட்டத்தில் பெரம்பலூர் கோட்டத்திற்கு உட்பட்ட மின் நுகர்வோர் பங்கேற்று தங்களுடைய குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2021 — Kaalaimalar | காலைமலர் . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for Tamil Daily News -Kalaimalar.

error: Content is protected !!