நாமக்கல் அருகே மினி லாரி மீது லோடு ஆட்டோ மோதல்: பள்ளி மாணவி உயிரிழப்பு

schedule
2019-01-23 | 15:48h
update
2019-01-23 | 15:48h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

In the mini-lorry collision with a Load auto near Namakkal: School student killed

நாமக்கல் அருகே மினி லாரி மீது லோடு ஆட்டோ மோதிய விபத்தில் பள்ளி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.

Advertisement

நாமக்கல் சாமி நகரைச் சேர்ந்த ராஜேந்திரன் (38),இவர் தனது லோடு ஆட்டோவில் சோளத்தட்டு ஏற்றிக்கொண்டு நாமக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்த ஆட்டோவில் ராஜேந்திரன், அவரது மனைவி சுகன்யா, மகள் தனிஷ்கா ஆகியோர் பயணம் செய்தனர்.

நாமக்கல் வள்ளிபுரம் தேசிய நெடுஞ்சாலை சந்திப்பு அருகே சென்ற போது, ரோடு ஓரம் நிறுத்தப்பட்டிருந்த மினி லாரி மீது லோடு ஆட்டோ எதிர்பாராத விதமாக மோதியது.

இந்த விபத்தில் ராஜேந்திரன், அவரது மனைவி சுகன்யா, மகள் தனிஷ்கா (10) ஆகிய 3 பேரும் படுகாயமடைந்தனர்.இதனையடுத்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் 3 பேரையும் மீட்டு நாமக்கல்லில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேல்சிகிச்சைக்காக தனிஷ்கா நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே தனிஷ்கா பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து நல்லிபாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் இறந்த தனிஷ்கா நாமக்கல்லில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 5ம் வகுப்பு படித்து வந்தார்.

Tags: Namakkal
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
19.04.2026 - 01:40:01
Privacy-Data & cookie usage: