வணிக நிறுவனங்களின், பெயர்ப் பலகைகளில் தமிழ் முதலில் இடம் பெற வேண்டும் : ஆட்சியர்

schedule
2019-01-22 | 18:04h
update
2019-01-22 | 18:05h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

In the name of business establishments, the name board should first be Tamil: Collector

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா தகவல்:

பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள கடைகள், தொழிற்சாலைகள், உணவகங்கள் உள்ளிட்ட அனைத்து வகையிலான வணிக நிறுவனங்களின், பெயர்ப்பலகைகளில் நிறுவனத்தின் பெயர் கட்டாயமாக முதலில் தமிழிலும், அதற்கடுத்து தேவைப்பட்டால் ஆங்கிலம் மற்றும் பிறமொழிகளிலும் இடம் பெறுமாறு அமைத்திடுதல் வேண்டும்.

Advertisement

மேலும் எழுத்துக்களின் அளவு தமிழ், ஆங்கிலம், பிறமொழி ஆகியவை முறையே 5:3:2 என்ற விகிதத்தில் அமைதல் வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கிலம் மட்டும் பயன்படுத்தும் நேர்வில் முறையே 5:3 என்ற விகிதத்தில் அமைதல் வேண்டும். மேற்குறிப்பிட்டவாறு பெயர்ப்பலகைகளை அமைத்திடுவதற்கு தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அரசாணையினை செயல்படுத்திடுவதற்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையும் ஆணையிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு, நீதிமன்ற ஆணைகளின்படி வணிக நிறுவனங்களில் பெயர்ப்பலகைகளை அமைத்திடுவதற்கு பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள கடைகள், தொழிற்சாலைகள், உணவகங்கள் உள்ளிட்ட அனைத்து வகை வணிக நிறுவனங்களும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பெயர்ப்பலகைகள் உரிய முறையில் உள்ளனவா? என தமிழ் வளர்ச்சித் துறை அலுவலர்கள், தொழிலாளர் நலத்துறை அலுவலர்கள் ஆய்வு மேற்கொள்வார்கள். 

விதிமுறைப்படி பெயர்ப்பலகை அமைத்திடாத நிறுவனங்களுக்கு தண்டத்தொகை விதிக்கப்படும். எனவே, தமிழ் வளர்ச்சிக்கு அரசின் பங்களிப்பு மட்டுமின்றி, வணிகர்களும் தங்களின் பங்களிப்பை அளிக்கும் விதமாக உடனடியாக பெயர்ப்பலகைகளை தமிழில் அமைத்திடுவற்கு பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து வணிக நிறுவனங்களும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், என தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
12.04.2026 - 22:14:00
Privacy-Data & cookie usage: