In the near Namakkal mallasamuthiram MCP Camp: Rs .13.63 Lakhs worth of welfare payments by Collector

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், மல்லசமுத்திரம் உள்வட்டத்திற்குட்பட்ட மல்லசமுத்திரம் மேல்முகம் மற்றும் மல்லசமுத்திரம் கீழ்முகம் ஆகிய வருவாய் கிராம பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சிறப்பு மனுநீதி நாள் முகாம் நேற்று நடைபெற்றது.

முகாமிற்கு மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் தலைமை வகித்து பேசியதாவது:

நாமக்கல் மாவட்டம் விவசாயிகள் அதிகமுள்ள மாவட்டமாகும். வேளாண்மை துறையின் சாட;பில் விவசாயிகளுக்கு வேளாண் கருவிகள், வேளாண் இடுப்பொருட்கள், விதைகள், மரக்கன்றுகள், சொட்டுநீர் பாசனம் அமைக்க மானியம் உள்ளிட்ட ஏராளமான நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு விவசாயிகளுக்கு வழங்கி வருகின்றது.
விவசாயிகள் சொட்டுநீர் பாசனம் அமைத்து குறைந்த நீரை கொண்டு நிறைந்த மகசூலை பெறுவதோடு நீர் சேமிப்பிற்க்கும் உதவிட வேண்டும்.

18 வயது குறைவான பெண்களுக்கு திருமணம் செய்யும் போது அவர்களுக்கு பிறக்கின்ற குழந்தைகள் மன வளர்ச்சி குறைவு மற்றும் பல்வேறு உடல் உறுப்புகள் வளர்ச்சி அடையாத குறை பாடுகளுடன் பிறக்கும் வாய்ப்புகள் அதிகம். பெண்களுக்கு இரத்தசோகை நோய் தாக்கம் அதிகம் ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இதனை போக்குவதற்கு பெண்கள் அதிக காய்கறிகள், முறுங்கை கீரை உள்ளிட்ட கீரைகள், பழங்கள் உள்ளிட்ட சத்தான பொருட்களை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவித்தொகை, உதவி உபகரணங்கள், பெட்ரோல் ஸ்கூட்டர், சக்கர நாற்காலிகள் உள்ளிட்ட பல்வேறு வகையான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

நாமக்கல் மாவட்டத்தில் 1000 ஆண் குழந்தைகளுக்கு 837 பெண் குழந்தைகள் என்ற விகிதத்தில் குழந்தைகள் பிறக்கின்றன. ஆண், பெண் குழந்தைகள் பாலின பிறப்பு விகிதத்தை சீராக்க அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்தினால் முழு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

பொது மக்களும் கல்லூரி மாணவ, மாணவியர்களும் இது குறித்து விழிப்புணர்வு அடைய வேண்டும். குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு பின் திருமணம் செய்வதற்கு கிடைக்காத நிலை ஏற்படலாம். எனவே பிறக்கின்ற குழந்தை ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் முழு மனதுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும். கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்று ஸ்கேன் மையம் நடத்துபவர்கள் பெற்றோரிடம் தெரிவிக்க கூடாது. அவ்வாறு தெரிவித்தால் சம்மந்தப்பட்ட நபர்களின் மீது அரசு சட்டங்களின் படி கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பேசினார்.

இந்த மனுநீதி நாள் முகாமில் மொத்தம் 93 பயனாளிகளுக்கு ரூ.13 லட்சத்து 63 ஆயிரத்து 423 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். நிகழ்ச்சியில் திருச்செங்கோடு ஆர்டிஓ பாஸ்கரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் கண்ணன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சுப்ரமணியம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்சுப்ரமணி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags:

Copyright 2015 - © 2019 — Kaalaimalar | காலைமலர் . All Rights Reserved | NEWS : kaalaimalar2@gmail.com | 9003770497

error: Content is protected !!