பெரம்பலூர் மாவட்டத்தில், அம்மா பூங்கா

உடற்பயிற்சி கூடம் : பூமி பூஜை

schedule
2017-07-09 | 19:45h
update
2026-04-09 | 04:46h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

In the Perambalur district, Amaa Garden & Gym: The Bhoomi Puja

பெரம்பலூர் மாவட்டத்தில் 1.5 கோடி மதிப்பில் அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம் கட்டுமான பணிக்களுக்கான பூமி பூஜை இன்று காலை நடந்தது

தாய் – 2 திட்டம் மூலம் பெரம்பலூர; மாவட்டத்தில் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் 5 இடங்களில் அம்மா பூங்கா மற்றும் அம்மா உடற்பயிற்சி கூடம் கட்டுவதற்கான பூமி பூஜை பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர்.

Advertisement

பெரம்பலூர் மாவட்டத்தில் 5 இடங்களில் தலா 30 இலட்சம் வீதம் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் அம்மா பூங்கா மற்றும் அம்மா உடற்பயிற்சி கூடம் தாய் – 2 திட்டம் மூலம் பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட எளம்பலூர் ஊராட்சியிலும், வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட எறையூர் ஊராட்சியிலும், வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஓலைப்பாடி ஊராட்சியிலும், ஆலத்தூர; ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட செட்டிக்குளம் ஊராட்சி மற்றும் சாத்தனூர் ஊராட்சியிலும் அமைக்கப்படவுள்ளது.

இதற்கான பூமி பூஜை இன்று எளம்பலூர் ஊராட்சிக்கு உட்பட்ட பெரம்பலூர் நான்கு ரோடு அருகே உள்ள மின்நகரில், சிதம்பரம் பாராளுமன்ற உறுப்பினர் மா.சந்திரகாசி, சட்டமன்ற உறுப்பினர்கள் இரா.தமிழ்செல்வன் (பெரம்பலூர்), ஆர்.டி.ராமச்சந்திரன் (குன்னம்) ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

அம்மா பூங்கா மற்றும் அம்மா உடற்பயிற்சி கூடம் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டு அமைக்கப்படவுள்ளது. அதில் பூங்கா, உடற்பயிற்சி கூடம், பூப்பந்து கூடம், குழந்தைகளுக்கென தனியாக விளையாட்டு அரங்கம், மற்றும் ஆண்கள், பெண்கள், குழந்தைகளுக்கென தனித்தனியே கழிவறை வசதிகளுடனும் ஏற்பாடு செய்யப்பட உள்ளது.

பூங்காவில் 8 வடிவிலான நடைபாதையும், சுற்றுச்சுவரும் அமைக்கப்படவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மோகன், மணிவாசகம், உதவி பொறியாளர் ஆனந்தன் மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள், அதிமுக கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
09.04.2026 - 04:47:03
Privacy-Data & cookie usage: