மு.க.ஸ்டாலின் முன்னிலையில், பெரம்பலூர் தேமுதிக பிரமுகர் திமுகவில் இணைந்தார்.

schedule
2021-10-23 | 17:42h
update
2021-10-23 | 17:42h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

In the presence of MK Stalin, Perambalur DMDK Celebrity joined the DMK.

தேமுதிக பெரம்பலூர் மாவட்ட செயலாளர் துரை.காமராஜ் தன்னுடைய ஆதவாளர்களுடன் ஸ்டாலின் முன்னிலையில், நேற்றிரவு திமுகவில் இணைந்தார். பெரம்பலூர் அரணாரையை சேர்ந்த இவர், கடந்த 1989 ஆண்டு முதல் விஜயகாந்தின் தீவிர ரசிகராகவும், விஜயகாந்த் மன்ற பொறுப்பாளராகவும் இருந்து வந்தார். பின்னர் 2005 ஆம் ஆண்டு, தேமுதிக ஆரம்பித்த பிறகு மாவட்ட செயலாளராகவும் தொடர்ந்து இருந்து வந்தார். குன்னம் தொகுதியில் இருமுறை தேமுதிக சார்பில் சட்டமன்ற தொகுதிக்கு வேட்பாளராகவும், போட்டியிட்டார். விஜயகாந்தின் தீவிர ரசிகராக இருக்கும் கொள்கைப்பிடிப்பால் இருந்து வந்தவர், நேற்றிரவு திமுக தலைவர் மு க ஸ்டாலின் முன்னிலையில், தன்னை திமுகவுடன் இணைத்துக் கொண்டார். அப்போது தேமுதிக மாவட்ட பொறுப்பாளர் கண்ணுசாமி மற்றும் குரும்பலூர் நகர பொறுப்பாளர் புகழேந்தி ஆகிய இருவரும் இணைந்து கொண்டனர். அப்போது ஆ. ராசா எம்.பி. அமைச்சர் சிவசங்கர் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர். தேமுதிகவின் பெரம்பலூரில் முக்கிய தூணாக இருந்த துரை காமராஜ் திமுகவை சென்றதால் தேமுதிக அடுத்த கட்ட நகர்வில் பின்னடைவை சந்தித்துள்ளது.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
12.06.2026 - 12:08:23
Privacy-Data & cookie usage: