பாலியல் விவகாரத்தில், பெரம்பலூர் எம்.எல்.ஏ வை காப்பாற்றி விடலாம் என முதலமைச்சர் நினைத்துவிடக்கூடாது : மு.க. ஸ்டாலின்!

schedule
2019-04-26 | 17:47h
update
2019-04-26 | 17:47h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

In the sexual case, the chief minister should not think that the Perambalur MLA can be rescued: MK Stalin!

திமுக தலைவர் முக ஸ்டாலின் இன்று விடுத்துள்ள அறிக்கை:

பொள்ளாச்சி கொடுமைக்கே இன்னும் நீதி கிடைக்காத நிலையில், பெரம்பலூரில் பெண்களிடம் பாலியல் வன்முறை. அ.தி.மு.க அரசு நீடிக்கும் ஒவ்வொரு நிமிடமும் பெண்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

பொள்ளாச்சி வழக்கை முடிந்தவரை சி.பி.சி.ஐ.டி போலீஸார் மூலம் விசாரித்து, ஆளுங்கட்சியின் முக்கியப் புள்ளிகளுக்கு எதிரான ஆதாரங்களை எல்லாம் அழித்து விட்டு, பிறகு சி.பி.ஐ.யிடம் வழக்கு விசாரணையை ஒப்படைக்கலாம் என்றோ, பெரம்பலூர் வழக்கினை மூடி மறைத்து அ.தி.மு.க எம்.எல்.ஏ.வை காப்பாற்றி விடலாம் என்றோ முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிசாமி கனவில் கூட நினைத்துவிடக்கூடாது என்று எச்சரிக்க விரும்புகிறேன்.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
08.04.2026 - 21:15:12
Privacy-Data & cookie usage: