பெரம்பலூரில் கடை, வீட்டின் பூட்டை உடைத்து 25 சவரன்; ரூ. 60 ஆயிரம் ரொக்கம் கொள்ளை

schedule
2018-10-19 | 18:19h
update
2026-07-06 | 05:09h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

In the store, and breaking lock of the house the 25-pound; Rs. 60 thousand cash robbery in Perambalur

பெரம்பலூரில் தனியார் பள்ளி தலைமை ஆசிரியை வீட்டில், 25 சவரன் தங்க நகை 75 ஆயிரம் ரொக்க பணம் களவு போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட வடக்கு மாதவி சாலை, ராஜீவ் நகரில் ஒரு வாடகை வீட்டின் முதல் தளத்தில் வசிப்பவர் சந்திரசேகர் மனைவி கமலாதேவி (வயது சுமார் 50). இவர் அதே பகுதியிலுள்ள ஒரு தனியார் பள்ளியில் ஒன்றில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

Advertisement

இதனிடையே தொடர் 4 நாட்கள் விடுமுறை என்பதால் வீட்டை பூட்டி விட்டு கமலாதேவி குடும்பத்துடன் வெளியூர் சென்று விட்டார். இந்நிலையில் அப்பகுதி குடியிருப்பு வாசிகள் கமலாதேவியின் வீட்டின் பூட்டு உடைத்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து வெளியூருக்கு சென்றுள்ள கமலாதேவிக்கு இன்று காலை தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்த கமலாதேவி பெரம்பலூர் திரும்பி வந்தார்.

இது குறித்த புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் தடய அறிவியியல் நிபுணர்கள் மற்றும் துப்பறியும் நாயுடன் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு நடத்தினர்.

போலீசாரின் விசாரணையில் கமலாதேவி வீட்டு பீரோவில் வைத்திருந்த 25 சவரன் தங்க நகை 75 ஆயிரம் ரொக்க பணமும், அதே கட்டிடத்தில் கீழ் தளத்தில் வாடகைக்கு மளிகை பொருட்களை விற்கும் ஏஜென்சி அலுவலகத்தில் பூட்டை உடைத்து10 ஆயிரம் ரொக்க பணத்தையும் நள்ளிரவு நேரத்தில் மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் திருட்டு சம்பவத்தில்ஈடுபட்ட குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

திருட்டு சம்பவம் நடந்த ஏஜென்சி அலுவலகத்தில் சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளது. அது பழுதானது தெரியாமல் துண்டு போட்டு முடி விட்டு திருடர்கள் பணத்தை திருடி சென்றுள்ளனர்.

ஆயிரக்கணக்கில் செலவு செய்து வீடு மற்றும் அலுவலகங்களில் சிசிடிவி பொருத்துவது எவ்வளவு முக்கியமோ அதே அளவு அதனை பராமரிப்பதும் மிக முக்கியம்.

அவ்வாறு பராமரித்திருந்தால் இந்த திருட்டு சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை போலீசார் எளிதில் கண்டறிந்து, விசாரணை மேற்கொள்ள உதவியாக இருந்திருக்கும் என்பதே இச்சம்பவம் எடுத்துக்காட்டுகிறது.

Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
06.07.2026 - 05:09:21
Privacy-Data & cookie usage: