நாமக்கல் அருகே இருசக்கர வாகனம் மோதியதில், நடந்து சென்ற பெண் பலி!

schedule
2018-12-16 | 16:22h
update
2018-12-16 | 17:33h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

In the two-wheeler vehicle collision near Namakkal, the woman victim was walking!

நாமக்கல் அருகே சாலையில் நடந்த சென்ற பெண் மீது இருசக்கர வாகனம் மோதியதில், அப்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

Advertisement

நாமக்கல் மாவட்டம், பாலப்பட்டியைச் சேர்ந்தவர் செல்லத்துரை, இவரது மனைவி சந்திரா (வயது 55). காய்கறிக் கடை நடத்தி வந்தார். இவர் சம்பவத்தன்று வீட்டிற்கு செல்வதற்காக மோகனூரில் இருந்து வேலூர் செல்லும் முக்கிய சாலையை கடக்க நடந்து சென்றுள்ளார். அப்போது மோகனூரில் இருந்து வேலூர் நோக்கி வந்த இரு சக்கர வாகனம் ஒன்று சந்திரா மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த சந்திராவை அருகில் இருந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அவர் சிகிச்சைக்காக பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அப்போது, வரும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து பரமத்தி வேலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து மோதி விட்டு நிற்காமல் சென்ற இரு சக்கர வாகன ஓட்டுனரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags: Namakkal
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
21.04.2026 - 19:02:16
Privacy-Data & cookie usage: