பெரம்பலூர் ரோவர் கல்வி நிறுவனத்தில் குட் ஷிப்பெர்டு சர்ச் திறப்பு விழா!

schedule
2022-07-02 | 20:34h
update
2022-07-02 | 20:34h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Inauguration of Good Shipped Church at Roever Educational Institution, Perambalur

பெரம்பலூரில் முன்னோடி நிறுவனங்களில் ஒன்றான ரோவர் கல்வி நிறுவனங்களில் இன்நறு 4.30 மணியளவில், புதிய (குட் ஷிப்பேர்டு | Good Shepherd) நல்ல மேய்ப்பர் சர்ச் திறப்பு விழா நடந்தது. அதோடு ரோவர் நிறுவனங்களின் தலைவராக இருக்கும் வரதராஜனின் 79வது பிறந்த நாள் விழாவும் கொண்டாடப்பட்டது.

Advertisement

இந்த நிகழ்ச்சியில், கும்பகோணம் கோட்ட மறை மாவட்ட முன்னாள் பிஷப் பீட்டர் ரெமிஜுஸ், திருச்சி கிழக்கு எம்.எல்.ஏ இனிகோ இருதயராஜ், மற்றும் பெரம்பலூர் எம்.எல்.ஏ பிரபாகரன் ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

ரோவர் கல்வி நிறுவனங்களின் சேர்மன் கே.வரதராஜன், பெரம்பலூர் சர்ச் பாதிரியார் ஏ.ராஜமாணிக்கம், திருச்சி விகார் ஜெனரல் பாதிரியார் எல். ஆன்துவன், பெரம்பலூர் திமுக மாவட்ட செயலாளர் சி.ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வாழ்த்து உரை வழங்கினர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த லாடபுரம் ராஜீவ் காந்தி, மாருதி எலக்ட்ரானிக்ஸ் ரமேஷ், வள்ளலார் மோட்டார்ஸ், வள்ளலார் ப்ளை ஆஷ் கம்பனிகளின் உரிமையாளர் அரவிந்தன், மற்றும் மதிமுக பிரமுகர் ஜெயசீலன் உள்ளிட்ட கட்சியினர்,
நகரின் முக்கிய பிரமுகர்கள், கலந்து கொண்டு வாழ்த்துகள் தெரிவித்தனர்.

இதற்கான ஏற்பாடுகளை ஜான் டிரஸ்ட் அறக்கட்டளை நிர்வாகிகள், உறுப்பினர்கள், மற்றும் கல்லூரி மேலாண்மை நிர்வாகிகள், முதல்வர்கள், பணியாளர்கள், மாணவர்கள் செய்திருந்தனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
04.06.2026 - 15:11:35
Privacy-Data & cookie usage: