வரும் ஜன.6 கால வரையற்ற வேலை நிறுத்தம்; தமிழ்நாடு உயர்நிலைப்பள்ளி

மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் அறிவிப்பு!

schedule
2025-12-21 | 14:09h
update
2025-12-21 | 16:07h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Indefinite strike from January 6th; Announcement by the Tamil Nadu High School and Higher Secondary School Graduate Teachers Association!

தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் மாநில பொது குழு கூட்டம் மாநில தலைவர் சி. ஜெயக்குமார் தலைமையில் நடந்தது, நிறுவன தலைவர் முனைவர் அ. மாயவன் முன்னிலை வகித்தார். பெரம்பலூர் மாவட்டதலைவர் அன்புச்செல்வன் வரவேற்றார். செயல் அறிக்கையை மாநில பொதுச் செயலாளர் மா. குமரேசனும், வரவு – செலவு அறிக்கையை மாநில பொருளாளர் ம.விஜயசாரதியும் தாக்கல் செய்தனர்.

கூட்டத்தில், பழைய ஓய்வூதியம் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அறிவுத்துள்ள டிசம்பர் 27 வேலை நிறுத்த ஆயத்த மாநாட்டையும், ஜனவரி 6 முதல் நடைபெற உள்ள காலவரையறையற்ற வேலை நிறுத்ததையும் மாநில, மாவட்ட, வட்ட நிர்வாகிகள் முழுவீச்சுடன் பணியாற்றி வெற்றி பெற செய்வது, ஆசிரியர்கள் பணியில் நீடிக்கவும், பதவி உயர்வுக்கும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்கும் நாடாளுமன்றத்தில் RTE Actல் Sec 23ல் திருத்தம் கொண்டு வர வேண்டும். உச்ச நீதிமன்ற தீர்ப்பிலேயே 2 ஆண்டுகள் கால அவகாசம் வழங்கியுள்ளதால் பணி நியமன முன்னுரிமை அடிப்படையில் உயர் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வை உடனடியாக வழங்கிடவும்,

Advertisement

தேர்வுநிலை, சிறப்புநிலை என்பது பணிக்காலத்தின் அடிப்படையில் வழங்கப்படுவது அதை வழங்காமல் ஊக்க ஊதியம் பெற்றதை சில மாவட்டங்களில் காரணம் காட்டி ஆணை வழங்காமல் மறுக்கப்பட்டுள்ள போக்கை வன்மையாக கண்டிக்கிறது. உடனடியாக பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் தலையிட்டு ஆணை வழங்க மாநிலம் முழுவதும் அறிவுறுத்திட வேண்டும் என்றும், நாகப்பட்டிணம் மாவட்டம், கிழக்கு கடற்கரை சாலையில் சுமார் 80 கிமீ நீண்டுள்ள பூகோள அமைப்பு உடைய மாவட்டம் ஆகும். இம்மாவட்டத்தில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் மையம் நாகப்பட்டிணத்தில் மட்டுமே செயல்பட்டு வருகிறது. எனவே, பெண் ஆசிரியர்கள் மிகுந்த மனச் சோர்வுக்கும், உடல் சோர்வுக்கும் உள்ளாவதால் வேதாரண்யத்தில், ஒரு மதிப்பீட்டு மையத்தை ஏப்ரல் 2026ல் அமைக்கவும்,

தொழிலாளர்களும், ஊழியர்களுக்கும் பாதுகாப்பாக இருந்த 29 தொழிலாளர் நலச் சட்டத்தை 4 தொகுப்பாக மாற்றி தொழிலாளர்களுக்கும், ஊழியர்களுக்கும் பாதுகாப்பற்ற நிலையை உருவாக்கும் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் எனவும், பள்ளிக் கல்வித்துறையில் உபரிப் பணியிடம் கணக்கிட்டு நிரவல் செய்த மாவட்டங்களில் மீதமுள்ள உபரி பணியிடம் பொதுத் தொகுப்பில் சேர்த்துள்ளதை, பள்ளிகளில் தேவையென உறுதி செய்யப்பட்டுள்ள பள்ளிகளுக்கு கூடுதல் பணியிடமாக ஒதுக்கீடு செய்து அரசாணையுடன் வழங்கி பட்டதாரி ஆசிரியர்கள் மாறுதலில் செல்லவும், புதிய நியமனம் செய்யவும் பயனுள்ளதாக அமையும், அதற்கு, பள்ளிக் கல்வித்துறை வழிவகை செய்திடவும்,

இழந்த உரிமைகளை மீட்பதற்காக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டதில் 04.10.2018 அன்று நடைபெற்ற ஒரு நாள் வேலை நிறுத்தத்தை பணிக் காலமாக கருதி ஊதியம் தமிழக அரசு வழங்கிடவும், 2004-2006 தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர் அனைவரையும் பணியேற்ற நாள் முதல் காலமுறை காலமுறை ஊதியம் ஊதியம் வழங்கிடவும், அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கான காப்பீட்டு NHIS திட்டத்தில் சிகிச்சை பெறுபவர்களுக்கு சிகிச்சைக்கான முழுத் தொகையும் (100%) தமிழக அரசு வழங்கிடவும், பட்டதாரி ஆசிரியர்கள் தொடர்ந்து 10 ஆண்டுகளாக பணிபுரிந்தால் அவர்களுக்கு தேர்வு நிலையும், 20 ஆண்டுகள் தொடர்ந்து பணி புரிந்தால் சிறப்பு நிலையும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
உயர்கல்விக்கு ஊக்க ஊதியம் பெறுவதற்கும் தேர்வு நிலை, சிறப்பு நிலை பெறுவதற்கும் எவ்வித தொடர்புமும், சம்பந்தமும் இல்லை. எனவே, நிலைமை இவ்வாறு இருக்கும் போது பல மாவட்டங்களில் கல்வி அதிகாரிகள் உயர் கல்விக்கான ஊக்க ஊதியம் பெற்றதை காரணம் காட்டி தேர்வு நிலை, சிறப்பு நிலை வழங்க மறுத்துள்ளது. கண்டனத்திற்குரியது. இத்தகைய தவறான போக்கை பள்ளிக் கல்வித் துறை நிறுத்திச் கொள்ளவும், மேலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் உடனடியாக ஆணை வழங்கிடவும், கல்வியாண்டின் இடையில் ஓய்வு பெறும் ஆசிரியர்கள் கல்வியாண்டின் இறுதி வரை அதாவது மே மாதம் வரை தொடர்ந்து பணி புரியலாம் என்பதை மிக கறாராக பள்ளிக் கல்வித்துறை கடைபிடிக்க வேண்டும் என பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநில ஆலோசகர் எஸ்.பக்தவச்சலம், மாநில தணிக்கையாளர் பெ.கணேஷ்ராஜா, மாவட்டத் தலைவர் அ. அன்புச்செல்வன், மாவட்ட பொருளாளர் ச.நந்தக்குமார் உள்பட தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான மாநில, மாவட்ட, வட்ட நிர்வாகிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். பெரம்பலூர் மாவட்ட செயலாளர் இரா.அருண்குமார் நன்றி உரையாற்றினார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
17.06.2026 - 06:53:39
Privacy-Data & cookie usage: