இந்திய விமானப் படைக்கு ஆள்சேர்ப்பு முகாம்

schedule
2017-10-06 | 08:38h
update
2026-07-03 | 23:21h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Indian Air Force Recruiting Camp

பெரம்பலூர் : 09.10.2017 மற்றும் 12.10.2017 ஆகிய தேதிகளில் இந்திய விமானப் படைக்கு ஆள்சேர்ப்பு முகாம் நடைபெறுகிறது

இந்திய விமானப் படைக்கு வேலூர், அண்ணாசாலை ரோடு, ஊர்ஹீஸ் கல்லூரியில் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஏர்மேன் பணியிடத்திற்கான தேர்வு 09.10.2017 மற்றும் 12.10.2017 அன்று நடைபெறவுள்ளது. இத்தேர்வில் 13 ஜனவரி 1998 அன்று முதல் 27 ஜுன் 2001 அன்று வரையில் பிறந்த, திருமணமாகாத ஆண்கள் கலந்துகொள்ளலாம்.

09.10.2017 அன்று காலை 6.00 மணி முதல் காலை 10.00 மணி வரை மதுரை, திருநெல்வேலி, விருதுநகா;, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, கிருஷ்ணகிரி, திருச்சிராப்பள்ளி, விழுப்புரம், சேலம், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, கடலூர், திருவாரூர், கரூர் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த நபர்களுக்கும் மற்றும் 12.10.2017 அன்று காலை 6.00 மணி முதல் காலை 10.00 மணிவரை வேலூர் கன்னியாகுமரி, தேனி, தஞ்சாவூர், திருவண்ணாமலை, சென்னை, திருவள்ளூர், திண்டுக்கல், தர்மபுரி, கோயம்புத்தூர், காஞ்சிபுரம், திருப்பூர், நாமக்கல், ஈரோடு, அரியலூர், நீலகிரி மற்றும் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த நபர்களுக்கும் தேர்வுகள் நடைபெறும்.

Advertisement

தகுதியுடைய நபர்கள் தங்களின் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்று மற்றும் மாற்று சான்றுகளுடன் வரவேண்டும். மாற்று சான்றிதழை கல்லூரியில் சமர்ப்பித்திருந்தால், பள்ளி-கல்லூரி முதல்வரிடம் அசல் சான்றுகள் பள்ளி-கல்லூரியில் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்ற உறுதி சான்றிதழுடன் சுய சான்றொப்பமிடப்பட்ட சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும், இத்தேர்வில் கலந்துகொள்ளும் நபர்கள் வேறு மாவட்டத்தில் ஏதேனும் பள்ளி மற்றும் கல்லூரி பயின்றிருப்பின் சொந்த மாவட்டத்திற்கான சான்றிதழ்களை அந்தந்த வட்டாட்சியரிடமிருந்து பெற்று சமர்ப்பிக்கவேண்டும்.

விண்ணப்பதாரர்கள் தகவல்களை அறிந்துகொள்ள www.airmenselection.gov.in என்ற இணையதளத்தின் மூலமாகவும், தொலைபேசி 044-22390561 (direct) 044-22395553 (extension-7833) மூலமாகவும், co.8asc-tn@govt.in மின்னஞ்சல் மூலமாகவும் தெரிந்துகொள்ளலாம்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
03.07.2026 - 23:22:01
Privacy-Data & cookie usage: