நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் இந்திராகாந்தி பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

schedule
2018-11-19 | 17:41h
update
2026-04-07 | 14:59h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Indira Gandhi Birthday Celebration on behalf of Namakkal East District Congress

நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் இந்திராகாந்தி பிறந்த நாள் விழாகொண்டாடப்பட்டது.

Advertisement

நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் பிறந்தநாள் விழா மணிக்கூண்டு அருகில் நடைபெற்றது. விழாவிற்கு நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஷேக்நவீத் தலைமை வகித்து இந்திரா காந்தியின் திருஉருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

மேலும் இந்திரா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

இந்த விழாவில் மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர்மாணிக்கம், விவசாய அணி மாவட்ட தலைவர் பாலமுரளி, மகளிர் அணி மாவட்ட துணைத்தலைவி பரிமளா, மாவட்ட செயலாளர் மகேஸ்வரி,வட்டார தலைவர்கள் கொல்லிமலை குப்புசாமி, புதுச்சத்திரம் இளங்கோ,நகர செயலாளர் தாமு, முன்னாள் நகராட்சி கவுன்சிலர் சோடா ராஜேந்திரன்,சேந்தமங்கலம் வட்டார செயலாளர் ரத்தினம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

இதனைத் தொடர்ந்து நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் பல்வேறு பகுதிகளில் இந்திரா காந்தி பிறந்த நாள் விழா மாவட்ட தலைவர் சேக்நவீத் தலைமையில் கொண்டாடப்பட்டது.

Tags: Namakkal
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
07.04.2026 - 15:00:00
Privacy-Data & cookie usage: