8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள தனித்தேர்வர்கள் நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

schedule
2017-11-14 | 13:20h
update
2026-07-04 | 05:33h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Individuals who have to write 8th grade general examination can apply from tomorrow

பெரம்பலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அருள்மொழிதேவி விடுத்துள்ள தகவல் :

ஜனவரி 2018 ல் நடைபெறவுள்ள தனித் தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்புப் பொதுத் தேர்வெழுத விண்ணப்பிக்கும் அனைத்து தனித்தேர்வர்களும் தற்போது நடைமுறையில் உள்ள புதிய பாடத்திட்டத்தில் மட்டுமே தேர்வெழுத வேண்டும். (பழைய பாடத்திட்டம் இல்லை) இத்தேர்விற்கு விண்ணப்பிக்கத் தேவையான குறைந்தபட்ச கல்வித்தகுதி அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் 8 ஆம் வகுப்பிற்கும் கீழ் படித்து இடையில் நின்ற 12½ வயது பூர்த்தி அடைந்தவர்களும் இத்தேர்விற்கு தனித்தேர்வராக விண்ணப்பிக்கலாம்.

மேற்கண்ட தேர்விற்கு விண்ணப்பிக்கும் தனித்தேர்வர்கள் (முதன்முறையாக தேர்வெழுத விண்ணப்பிப்பவர்கள்) நேரடித் தனித்தேர்வர்கள் ஆன்லைன் விண்ணப்பத்துடன் பள்ளி மாற்றுச் சான்றிதழ் நகல், பதிவுத்தாள் நகல், பிறப்புச் சான்றிதழ் நகல் இவற்றில் ஏதேனும் ஒன்றினை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

Advertisement

தோல்வியுற்ற பாடங்களை தற்போது தேர்வெழுத விண்ணப்பிப்பவர்கள் – ஏற்கனவே தேர்வெழுதி பெற்ற சான்றிதழ்களின் நகல்களை கண்டிப்பாக விண்ணப்பத்துடன் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். மேலும், தனித்தேர்வர்கள் – ரூ.42-க்கான அஞ்சல் வில்லை ஒட்டப்பட்ட, சுயமுகவரியிட்ட உறை ஒன்றை தவறாமல் விண்ணப்பத்துடன் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

பிறந்த தேதிக்கு ஆதாரமாக வாக்காளர் அடையாள அட்டை இத்தேர்விற்கு ஓட்டுநர் உரிமம், நோட்டரி, நோட்டரி பப்ளிக்கிடமிருந்து பெறப்பட்ட சான்றிதழ், குடும்ப அட்டை PANCARD போன்றவற்றை ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

மேற்காணும் தேர்விற்கு தேர்வுக்கட்டணமாக ரூ.100- பதிவுக் கட்டணம், ரூ.10- மதிப்பெண் சான்றிதழ் கட்டணம், ரூ.10- சேவைக்கட்டணம், ரூ.5- ஆன்லைன் பதிவுக்கட்டணம் 50- மொத்தம் – ரூ.175- ஐ 15.11.2017 முதல் 25.11.2017 வரை செலுத்தலாம்.

மேலும், சிறப்பு அனுமதி திட்டதின் கீழ் விண்ணப்பிக்க விரும்புவோர் 27.11.2017 முதல் 29.11.2017 வரை தேர்வுக் கட்டணமாக ரூ.100- பதிவுக் கட்டணம் ரூ.10- மதிப்பெண் சான்றிதழ் கட்டணம் ரூ.10- சேவைக்கட்டணம் ரூ.5- ஆன்லைன் பதிவுக்கட்டணம் 50- சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் செலுத்த வேண்டிய கூடுதல் தொகை ரூ.500- மொத்தம் – ரூ.675- ஐ சேவை மையமான அரசு மேல்நிலைப்பள்ளி பெரம்பலூரில் நேரில் பணமாக செலுத்த வேண்டும்.

தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு குறித்து பின்னர் தெரிவிக்கப்படும. அந்நாட்களில் இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதற்கான அறிவிக்கை தனியாக வெளியிடப்படும்.

தேர்வுக்கூட நுழைவுச்சீட்டில் குறிப்பிடப்படும் தேர்வு மையத்தில்தான் தேர்வர் தேர்வெழுத வேண்டும். தேர்வு மைய மாற்றம் குறித்த கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

தேர்வர் தேர்வெழுத விரும்பும் மொழி ( Medium – Tamil- English or Urdu ) ஆகியவற்றை கண்டிப்பாக விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும்.

மாற்றுத்திறனாளிகள், மனநலம் குன்றிய தேர்வர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்து பதிவிறக்கம் செய்யப்பட்ட மேற்படி விண்ணப்பத்துடன் சலுகைகள் கோரும் கடிதம். உரிய மருத்துவச் சான்றிதழ் மற்றும் இதர ஆவணங்களுடன் இணைத்து சேவை மையத்தில் சமர்ப்பித்தல் வேண்டும்.

தேர்வர்கள் பதிவு செய்ய வேண்டிய கடைசிநாள் 25.11.2017 மாலை 5.00 மணி வரையிலும் சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் பதிவு செய்ய வேண்டிய கடைசி நாள் 29.11.2017 மாலை 5.00 மணி வரையிலும் விண்ணப்பிக்கலாம், என தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
04.07.2026 - 05:33:36
Privacy-Data & cookie usage: