பள்ளி மாணவி தற்கொலைக்கு தூண்டிய வழக்கு: இளைஞருக்கு 2 ஆண்டு சிறை: நாமக்கல் நீதிமன்றம் தீர்ப்பு

schedule
2018-05-31 | 18:21h
update
2026-06-03 | 20:04h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Induced School student suicide case: Youths 2-year prison : Namakkal Mahila court order

நாமக்கல் : பள்ளி மாணவி தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் இளைஞருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாமக்கல் மகளிர் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நெசவாளர் காலனியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(வயது 22). இவர் கோனேரிப்பட்டியை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவி ஒருவர் பள்ளிக்கு செல்லும்போது பின்னால் சென்று அவரை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் அடிக்கடி தொந்தரவு செய்து வந்தார்.

Advertisement

இதுதொடர்பாக சுரேஷ்குமாரை அந்த மாணவி பலமுறை கண்டித்தும் அவர் கேட்கவில்லை. எனவே மனம் உடைந்த அந்த மாணவி கடந்த 2016ம் ஆண்டு ஜூலை மாதம் 17ம் தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். பின்னர் இச்சம்பவம் குறித்து மாணவி தரப்பில் ராசிபுரம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

இப்புகாரின் அடிப்படையில் ராசிபுரம் போலீசார் சுரேஷ்குமார் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை நாமக்கல் மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி இளங்கோ முன்னிலையில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிந்த நிலையில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது.

இதில் குற்றம் சாட்டப்பட்ட சுரேஷ்குமாருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. ஆயிரமும் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்கீல் சுசிலா ஆஜரானார்.

Tags: Namakkal
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
03.06.2026 - 20:04:44
Privacy-Data & cookie usage: