2 கால்களும், 2 கைகளும் செயலிழந்த மாற்றுத் திறனாளிகளுக்கு, விலையில்லா நகரும் மோட்டார் வண்டிகள் ; பெரம்பலூர் கலெக்டர் தகவல்

schedule
2020-11-27 | 12:40h
update
2020-11-27 | 12:40h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Inexpensive moving motor vehicles for disabled people with 2 legs and 2 arms paralyzed; Perambalur Collector Information

பெரம்பலூர் கலெக்டர் வெங்கடப்பிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

தமிழக அரசால் மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் மூலம் தசை சிதைவு நோய் மற்றும் முதுகு தண்டு வடம் பாதிக்கப்பட்டு இரண்டு கால்களும், இரண்டு கைகளும் செயலிழந்த (வுநவசயிடநபiஉ ஃ ஞரயனசipடநபiஉ) மாற்றுத்திறனாளிகளுக்கு விலையில்லா மோட்டாh; பொருத்தப்பட்ட நகரும் வண்டிகள் வழங்கப்பட உள்ளது.

Advertisement

பெரம்பலூர் மாவட்டத்தில் வசிக்கும் தசைசிதைவு நோய் மற்றும் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டு இரண்டு கால்களும், இரண்டு கைகளும் செயலழிந்த மாற்றுத் திறனாளிகளுக்கு விலையில்லா மோட்டார் பொருத்தப்பட்ட நகரும் வண்டிகள் பெற ஆண் மாற்றுத்திறனாளிகள் 60 வயதிற்கு மிகாமலும், பெண் மாற்றுத் திறனாளிகள் 55 வயதிற்கு மிகாமலும் இருக்கவேண்டும். கல்வி பயிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மத்திய, மாநில அரசுகளில் பணிபுரியும் மேற்கண்ட வகையை சேர்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கும் வழங்கப்படும்.

எனவே, தகுதியுடைய மாற்றுத் திறனாளிகள் தங்களது மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், கல்வி சான்றிதழ் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் -2, பணிபுரிபவர்களாக இருந்தால் பணிச்சான்று ஆகியவற்றுடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், பெரம்பலூர் என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ டிச.7. க்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம். மேலும், கூடுதல் விவரங்களுக்கு 04328 – 225474 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றும் அதில் தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
05.09.2026 - 01:46:36
Privacy-Data & cookie usage: