லட்சுமி மருத்துவமனையில் இலவச குழந்தையின்மைக்கான சிறப்பு மருத்துவ முகாம்: 520 பேர் பயனடைந்தனர்

schedule
2017-02-26 | 13:18h
update
2026-09-16 | 15:14h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Infertility specialist medical camp for FREE: 520 people participation in perambalur Lakshmi hospital

பெரம்பலூர் லட்சுமி டெஸ்ட்டியூப் பேபி சென்டர் மற்றும் லட்சுமி மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச குழந்தையின்மைக்கான சிறப்பு மருத்துவ முகாமில், குழந்தையில்லாத 520 பேர் பங்கேற்று பயனடைந்தனர்.

Advertisement

பெரம்பலூர் லட்சுமி டெஸ்ட்டியூப் பேபி சென்டர் மற்றும் லட்சுமி மருத்துவமனை இணைந்து, இலவச குழந்தையின்மைக்கான சிறப்பு மருத்துவ முகாமை இன்று நடத்தியது.

முகாமை லட்சுமி மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் கருணாகரன் துவக்கி வைத்தார். முகாமில், மகப்பேறு மற்றும் குழந்தையின்மைக்கான சிறப்பு மருத்துவர் எஸ்.டி. ஜெயலெட்சுமி தலைமையில், டாக்டர்கள் விஜயன், செந்தமிழ்ச்செல்வி, சசிகலா ஆகியோர் உள்ளிட்ட மருத்துவக் குழுவினர் நோயாளிகளுக்கு சிகிச்சை மற்றும் ஆலோசனைகள் வழங்கினர்.

முகாமில், கரு முட்டை குழாய்களில் அடைப்பு அல்லது வேறு ஏதேனும் பிரச்சனை உள்ளதா என்பதற்கான பரிசோதனை, ஃபைப்ராய்ட் அடினோ மையோஸிஸ் எண்டோமெட்ரியோஸிஸ், ஓலி கோஸ்பெர்மியா அசூஸ்பெர்மியா உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளுக்கு சிகிச்சைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

மேலும், இலவசமாக ஸ்கேன், ரத்தம் சிறுநீாப் பரிசோதனை மற்றும் மருந்து மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது.காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வரை நடந்த முகாமில் 520 பேர் பங்கேற்று பயனடைந்தனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
16.09.2026 - 15:15:02
Privacy-Data & cookie usage: