Informal cleaning staff, enrollment as a member of the welfare board through THADCO: Perambalur Collector!

Photo Credit : Perambalur.nic.in

பெரம்பலூர் கலெக்டர் வெங்கட பிரியா விடுத்துள்ள தகவல்:

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகம் தாட்கோ மூலம் 2008-ஆம் ஆண்டு முதல் தூய்மை பணிபரிவோர் நலவாரியம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் பல்வேறு நலத்திட்டங்கள் தூய்மை பணிபுரிவோர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. பெரம்பலூர் மாவட்டத்தில் நலவாரிய உறுப்பினர்களுக்கான அடையாள அட்டை வழங்கப்பட்டுவருகிறது. அனைத்து நகாரட்சி, பேரூராட்சி மற்றும் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் அமைப்புசாரா, தூய்மை பணியாளர்களுக்கு தாட்கோவின் மூலமாக தூய்மை பணிப்புரிவோர் நலவாரிய அடையாள அட்டை வழங்கப்பட்டு கல்வி உதவிதொகை, திருமண உதவி தொகை மகப்பேறு உதவி தொகை, முதியோர் உதவி தொகை மற்றும் கண் கண்ணாடி வாங்கிட உதவி தொகை போன்ற பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்படவுள்ளது.

மேலும், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நகராட்சி, நகர பஞ்சாயத்து மற்றும் கிராம பஞ்சாயத்து அலுவலங்களுக்கு அடையாள அட்டை பெறுவதற்கான விண்ணப்பங்கள் அனுப்பி வைக்கப்பட உள்ளது. ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் அமைப்புசாரா, தூய்மை பணியாளர்கள் தாங்கள் பணிபுரியும் அலுவலகத்தை அணுகி விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்து சம்மந்தப்பட்ட சுகாதார ஆய்வாளர் / உதவி செயற் பொறியாளர் /செயல் அலுவலர் /கிராம நிர்வாக அலுவலரின் கையொப்பத்துடன் , பெரம்பலூர் மாவட்ட தாட்கோ மேலாளர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலும், ஏதேனும் விபரங்களுக்கு 04328 – 276317 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!