வறட்சியால் பாதிக்கப்பட்ட தகவல்கள் விவசாயிகள் பார்வைக்கு வைக்கப்படுகிறது

schedule
2017-02-23 | 16:42h
update
2026-06-27 | 03:24h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Information is made available to farmers affected by drought

பெரம்பலூர் : பிப்23- 2016 ஆம் ஆண்டு வடகிழக்கு பருவமழை பொய்துபோனதன் காரணமாக ஏற்பட்ட வறட்சியை தொடர்ந்து, தமிழ்நாட்டில் உள்ள 32 மாவட்டங்களை வறட்சி மாவட்டமாக அறிவித்து, விவசாயிகளால் பயிரிடப்பட்ட பயிர்கள் 33 சதவிகிதத்திற்கு மேல், மகசூல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை கணக்கெடுப்பு செய்து, உரிய வறட்சி நிவாரணம் வழங்கப்படும்.

Advertisement

தமிழக அரசால் அறிவிக்கப்பட்டதன்படி, விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்கிட, பெரம்பலூர் மாவட்டத்தில் பயிரிடப்பட்ட பயிர்கள் சேத விவரம் குறித்த கிராம நிர்வாக அலுவலர் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர் ஆகியோரால் கணக்கெடுப்பு செய்து, பணி முடிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு கணக்கெடுப்பு செய்த விவரம், குறித்த பட்டியல் சம்மந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலங்களில் விவசாயிகளின் பார்வைக்காக நாளை (24.02.17) முதல் 03.03.17 ஆம் நாள் வரை வைக்கப்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் தங்களால் பயிரிடப்பட்ட பயிர்களின் சேத விவரம் குறித்த சம்மந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் மூலம் சரி பார்த்துக் கொள்ளலாம்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
27.06.2026 - 03:24:10
Privacy-Data & cookie usage: