Information Technology Park: Minister Dr. Manikantan will soon develop Ramanathapuram District

ராமநாதபுரம் மாவட்டத்தில் வேலைவாய்ப்பினை அதிகரித்திடவும், வளர்ச்சிப்பாதைதயில் கொண்டு செல்வதற்கும் தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் ஒருபகுதியாக மாவட்டத்தில் தகவல் தொழில்நுட்ப புங்கா, மின்னணு புங்கா அமைத்திட தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது, என, தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் பேசினார்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் சுவார்ட்ஸ் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, தகவல் தொழில்நுட்பவியல் துறை, மாவட்ட நிர்வாகம் சார்பில் தனியார் துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.

முதல் நாள் முகாமில் பணிக்கு தேர்வு பெற்ற இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் வழங்கினார். விழாவில் கலெக்டர் நடராஜன் தலைமை வகித்தார்.

இவ்விழாவில் அமைச்சர் டாக்டர் மணிகண்டன் பேசியதாவது:

முன்னாள் முதல்வர் அம்மா வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு பொது மக்கள் நலனுக்காக எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, தகவல் தொழில்நுட்பவியல் துறை ஒருங்கிணைப்பில் எப்ஐசிசிஐ, நாஸ்காம் ஆகிய அமைப்புகளில் இணைந்துள்ள நிறுவனங்கள் பங்கேற்று தகுதியுள்ள இளைஞர்களை தங்களது நிறுவனங்களில் பணிக்கு தேர்வு செய்திடும் விதமாக இவ்வேலைவாய்ப்பு முகாம் இரண்டு நாட்கள் தொடர்ந்து நடத்தப்படுகிறது.

இம்முகாமின் முதல் நாளான இன்று எச்சிஎல்,சோகோ, லைவ்வயர், எஸ்டிபி, டிவிஎஸ், எல்எம்டபிஸ்யு போன்ற பல்வேறு முன்னனி நிறுவனங்கள் உட்பட 100க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்றுள்ளனர். இம்முகாமில் இன்று மட்டும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரத்து 476 ஆண்கள், ஆயிரத்து 805 பெண்கள் என மொத்தம் 3 ஆயிரத்து 81 நபர்கள் பதிவு செய்து கலந்து கொண்டுள்ளனர். இளைஞர்களுக்கு தரமான கல்வி மற்றுமு் கல்விக்கேற்ற வேலைவாய்ப்பு வழங்குவதன் முலம் அவர்களது குடும்பத்தின் பொருளாதார வளர்ச்சியடைவதோடு, நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் வழிவகுக்கும் என்ற உயரிய எண்ணத்தில் இதுபோன்ற வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன.

மேலும், ராமநாதபுரம் மாவட்டத்தினை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் வேலைவாய்ப்பினை அதிகரித்திட ஏதுவாக தகவல் தொழில்நுட்ப புங்கா மற்றும் மின்னணு புங்கா அமைத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதேபோல், கூகுள் நிறுவனத்தின் முலம் சென்னையில் மழை, வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர் காலங்களில் 20 கி.மீ. சுற்றளவில் தகவல் தொடர்பு பாதிக்காத வகையில் தொழில்நுட்ப சாதனங்களை பயன்படுத்த ஏதுவாக கக்ஷகுள் லுாம் அமைத்திடவும் தமிழகத்தில் 6 மாவட்டங்களில் உள்ள 4 ஆயிரம் கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு கக்ஷகுள் நிறுவனத்தின் முலம் இணையதளம் க பயன்பாடு குறித்து பயிற்சி வழங்கிடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது, இவ்வாறு அமைச்சர் டாக்டர் மணிகண்டன் பேசினார்.

ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 63 ஆயிரத்து 106 ஆண்கள், 75 ஆயிரத்து 394 பெண்கள் என மொத்தம் ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 500 நபர்கள் வேலைவாய்ப்பிற்காக பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாம் முலம் ஆயிரத்து 119 நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. ஆயிரத்து 739 நபர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

விழாவில் ராமநாதபுரம் ஆர்டிஓ டாக்டர் சுமன், நாஸ்காம் தலைவர் ஸ்ரீதரன், மகளிர் திட்டம் திட்ட அலுவலர் குருநாதன், மாவட்ட மத்திய கக்ஷட்டுறவு வங்கி தலைவர் ஜெயஜோதி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணாதுரை, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் அபுபக்கர் சித்திக், தனியார் வேலைவாய்ப்பு நிறுவன ஏற்பாட்டாளர் அம்பலவாணன் உட்பட பலர் பங்கேற்றனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!