infrontof Perambalur collectorate, staged a demonstration demanding the Association of Tamil Nadu Rural Development Officer.

schedule
2016-07-08 | 18:01h
update
2026-06-28 | 18:10h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

infrontof Perambalur collectorate, staged a demonstration demanding the Association of Tamil Nadu Rural Development Officer.

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்டத் தலைவர் இ. மரியதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டதிற்கு, சங்க நிர்வாகிகள் மு. இமயவரம்பன், எஸ்.ஆர். மோகன், கே. கௌதமன், சேவு, பெ. தேவேந்திரன், லட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் கி. ஆளவந்தார், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட செயலர் சா. இளங்கோவன், மாவட்ட துணைத்தலைவர் பி. தயாளன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

Advertisement

ஆர்ப்பாட்டத்தில், உள்ளாட்சித் தேர்தல் 2016-க்கான பணியிடங்களை உரிய பதவி உயர்வு மூலம் வழங்க வேண்டும். நேரடி நியமன உதவியாளர்களுக்கு பணி விதி உருவாக்க வெளியிடப்பட்ட அரசாணையில் உள்ள முரண்பாடுகளை களைய வேண்டும். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் காலிப் பணியிடங்களை பணி உயர்வு மூலம் நிரப்ப வேண்டும். கணினி இயக்குபவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். வட்டார, மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு ஊதிய உயர்வுகள் வழங்கி மருத்துவக் காப்பீடு, குடும்ப பாதுகாப்பு திட்டங்களில் சேர்க்க வேண்டும்.

சில்லரை செலவின ஊழியர்களை பணி நிரந்தப்படுத்த வேண்டும். பொறியியல் பிரிவு இருப்பு கிடங்கு பொறுப்பாளர் பணியிடத்தை புதிய நியமனம் மூலம் நிரப்ப வேண்டும். ஒன்றிய பணி மேற்பார்வையாளர் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தினர்.

இதில், சத்துணவு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் செல்லபிள்ளை, சாலை பணியாளர் சங்க மாவட்ட செயலர் மணிவேல், மருந்தாளுநர் சங்க மாவட்டத் தலைவர் ஆனந்தன், சுகாதாரத்துறை அலுவலர் சங்க மாவட்டத் தலைவர் ராஜ்மோகன், வருவாய்த்துறை அலுவலர் சங்க மத்திய செயற்குழு உறுப்பினர் குமரி அனந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட பொருளாளர் இரா. அறிவழகன் நன்றி கூறினார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
28.06.2026 - 18:10:47
Privacy-Data & cookie usage: