பெரம்பலூர் அருகே விபத்தில் படுகாயம் அடைந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

schedule
2020-01-18 | 12:32h
update
2020-01-18 | 12:32h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Injured in the crash near the death of the young men undergoing treatment in Perambalur

பெரம்பலூர் அருகே நேற்று முன்தினம் மின்கம்பத்தில் டூவீலர் மோதி ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Advertisement

பெரம்பலூர் அருகே வடக்கு மாதவி சாலையிலுள்ள சமத்துவபுரம், மகாத்மா காந்தி நகரை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் ரமேஷ் (வயது 23), கோயம்புத்தூரில் டெய்லராக வேலை பார்த்து வந்த இவர் பொங்கல் விடுமுறைக்காக பெரம்பலூருக்கு வந்திருந்தார்.

இந்நிலையில், தனது தாய் மாமன் சக்திவேலின் இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு ஆலம்பாடி கிராமத்திலிருந்து பெரம்பலூர் நோக்கி வந்த போது, அன்னை குடி போதை மறுவாழ்வு மையம் என்ற இடத்தில் சாலையோர மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானார்.

இந்த விபத்தில் படுகாயமடைந்த ரமேஷ் முதலுதவி சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை 8.20 மணியளவில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இதுகுறித்து ரமேஷின் தந்தை செல்வராஜ் அளித்த புகாரின் பேரில் பெரம்பலூர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் நித்தியா வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
11.07.2026 - 19:47:33
Privacy-Data & cookie usage: