Innovative demonstration by farmers in Perambalur, demanding to Contuct grievance meetings
பெரம்பலூரில் குறைதீர் கூட்டங்களை நடத்த வலியுறுத்தி தமிழக விவசாயிகள் சங்கத்தினர் நூதன முறையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர் புதுபஸ்ஸ்டாண்டில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில செயலாளர் ராஜாசிதம்பரம் தலைமை வகித்தார். முன்னாள் மாவட்ட தலைவர் வேணுகோபால் முன்னிலை வகித்தார்.
இதில் மாதந்தோறும் நடைபெற்றுவந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தையும், மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தையும், திங்கட்கிழமை தோறும் நடைபெற்று வந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தையும் மீண்டும் நடத்தக்கோரி கண்ணில் கருப்பு துணி கட்டி, கைகளால் காதை பொத்தி நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் மாணிக்கம், செயலாளர் நீலகண்டன், பொருளாளர் மணி உட்பட பலர் கலந்துகொண்டனர்.