Innovative struggle to send one lakh petition to the Chief Minister of Tamil Nadu, Rural Development Department All Employees Union!

ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் மாவட்ட செயலாளர் மணிகண்டன் தலைமையில் தமிழக முதலமைச்சருக்கு 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு லட்சம் கோரிக்கை மனுக்களை தபாலில் அனுப்பும் வகையில் தபால் நிலையங்களில் தபால்களை அனுப்பி அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் ராமநாதபுரம் தலைமை தபால் நிலையத்தில் மாநில பொது செயலாளர் வேல்முருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது; தமிழகத்தில் கிராம ஊராட்சியில் பணியாற்றி வரும் கிராம ஊராட்சியின் மேல்நிலை தொட்டி இயக்குபவர்களுக்கு பிறப்பிக்கப்பட்ட அரசு ஆணை மூலம் பணியாளர்கள் ஏற்கனவே பெற்று வந்த ஊதியத்தை விட 850 ரூபாய் குறைவான ஊதியம் பெற வேண்டியுள்ளது.

எனவே, இந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் கிராம ஊராட்சிகளில் ஊராட்சி மன்ற தலைவர்கள் ஊராட்சி செயலர்களுக்கு மாத ஊதியம் வழங்கும் போது வேண்டுமென்றே காலதாமதம் செய்து வருகின்றனர் எனவே ஊராட்சி செயலர்கள் இன் நீண்ட நெடிய நாள் கோரிக்கையான ஊதியத்தை அரசு கருவூலத்தில் வழங்கிட வேண்டும்.

ஊராட்சி ஒன்றியங்களில் 18 ஆண்டு காலமாக தற்காலிக பணியாளர்கள் பணியாற்றி வரும் வட்டார மாவட்ட சுகாதார ஒருங்கிணைப்பாளர்களுக்கு மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான ஊதியம் 20 ஆயிரம் வழங்க வேண்டும் கிராம ஊராட்சிகளில் பணியாற்றிவரும் தூய்மை பணியாளர்களுக்கு 2010ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர் கலைஞர் சிறப்பு காலமுறை ஊதியம் வழங்க அரசாணை பிறப்பித்தார். அதன் பின்னர் 2013 முதல் 2020 ஆம் ஆண்டுகளில் தனி அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

இது தமிழகம் முழுமைக்கும் அமல்படுத்தப்படவில்லை. எனவே அனைத்து தூய்மைப் பணியாளர் களுக்கும் அரசாணைப்படி ஊதியம் நிர்ணயித்து இயக்குனரகத்தில் இருந்து தனி உத்தரவு பிறப்பிக்க வேண்டும். உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ராமநாதபுரம் தலைமை அலுவலகத்தில் மாவட்டம் முழுவதும் இருந்து வந்திருந்த ஊராட்சி செயலர்கள் தமிழக முதல்-அமைச்சருக்கு கோரிக்கை மனுக்களை தபாலில் அனுப்பி உள்ளோம், என்றார்.

அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்ட மாநில துணை தலைவர் நாகேந்திரன், மாநில மகளிர் அணி செயலாளர் செந்தாமரைச் செல்வி, மாவட்ட பொருளாளர் ஜெயபால் ஒன்றியச் செயலாளர் செந்தில்குமார் ஒன்றிய செயலாளர் முனியசாமி கடலாடி ஒன்றிய செயலாளர் முனீஸ்வரன் உட்பட பலர் பங்கேற்றனர் மாவட்ட பொருளாளர் திருமாறன் நன்றி கூறினார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!