ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ் விழிப்புணர்வு விளம்பர ஊர்தியை மாவட்ட வருவாய் அலுவலர் துவக்கி வைத்தார்

schedule
2016-03-04 | 14:43h
update
2026-04-23 | 05:39h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

பெரம்பலூர்: ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ் விழிப்புணர்வு விளம்பர ஊர்தி சென்னை மாவட்டத்தில் துவங்கி, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று வளர் இளம் பெண்களுக்கான ஆலோசனைகள், கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கான கருத்துப்பரிமாற்றங்கள், தாய்பாலை பற்றிய விழிப்புணர்வுகளை பொதுமக்களுக்கு ஏற்படுத்தி வருகின்றது.

இன்று பெரம்பலூர் மாவட்டத்திற்கு வருகை புரிந்த இவ்வாகனத்தை மாவட்ட வருவாய் அலுவலர் மீனாட்சி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.
அதனை தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் தெரிவித்தாவது:

Advertisement

இந்த விழிப்புணர்வு விளம்பர ஊர்தியில் வளர் இளம் பெண்களுக்கான ஆலோசனைகள், கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கான கருத்துப்பரிமாற்றங்கள், தாய்பாலை பற்றிய விழிப்புணர்வு, 6 மாதம் முதல் 3 வயது குழந்தைகள், கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கான இணை உணவு வழங்குதல், 3 வயது முதல் 5 வயது குழந்தைகளுக்கான முன்பருவக் கல்வி குறித்த விழிப்புணர்வு, சத்தான மதிய உணவில் பல்வகை உணவு வழங்குதல், தகவல் கல்வி தொடா;பு முகாம் மூலம் நடத்தப்படும் விழாக்கள் குறித்த கருத்துக்களை பயனாளிகள் பயன் அடையும் வகையில் வீடியோ திரையின் மூலமாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.

இந்த விளம்பர ஊர்தி பெரம்பலூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், புதிய பேருந்து நிலையம் மற்றும் சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயிலில் உள்ளிட்ட இடங்களில் தனது பிரச்சார பணிகளை மேற்கொள்ளும். எனவே பொதுமக்கள் இவ்வாகனத்தின் வாயிலாக தெரிவிக்கபடும் கருத்துக்களை கேட்டு பயன்பெற வேண்டும்.
என தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் தி.புவனேஸ்வரி, குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள், மேற்பார்வையாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் தாய்பாலூட்டும் தாய்மார்கள், வளர் இளம் பெண்கள் மற்றும் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
23.04.2026 - 05:39:25
Privacy-Data & cookie usage: