பெரம்பலூரில், ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்ட திறனூட்டல் மாநாடு

schedule
2018-09-11 | 15:49h
update
2026-07-06 | 02:22h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Integrated Finance and HR Management Planning Conference at Perambalur

பெரம்பலூர்: ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்ட திறனூட்டல் மாநாடு மாவட்ட ஆட்சித்தலைவா; திருமதி.வே.சாந்தா,இ.ஆ.ப அவா;கள் முன்னிலையில், கருவூலம் மற்றும் கணக்குத் துறையின் முதன்மைச் செயலர், ஆணையர் சு. ஜவஹர் தலைமையில் இன்று தனியார் கல்லூரியில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கருவூலம் மற்றும் கணக்குத் துறையின் முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் பேசியதாவது:

கருவூலம் மற்றும் கணக்குத் துறையானது தமிழ்நாடு நிதித்துறையின் கீழ் ஒரு தனித் துறையாக செயல்பட்டு வருகிறது. இத்துறையின் மூலம் 2017-18 ஆம் நிதியாண்டில் தமிழகம் முழுவதும் உள்ள சம்பளம் மற்றும் கணக்கு அலுவலகங்கள், மாவட்ட கருவூலங்கள் மற்றும் சார்நிலைக் கருவூலங்கள் மூலமாக ரூபாய் ஒரு லட்சத்து ஐம்பத்து ஐந்தாயிரத்து எண்ணூற்று இருபத்து நான்கு கோடி வரவினமாகவும், ஒரு லட்சத்து எழுபதாயிரத்து இருநூற்று ஐம்பத்து ஆறு கோடி செலவினமாகவும் அரசின் நிதியானது கையாளப்பட்டுள்ளது.

மேலும், தமிழ்நாடு அரசு நிதி மேலாண்மை தொடர்பான அரசுப் பணிகள் திறம்பட நடைபெறவும், கருவு+லப் பணிகளை மேம்படுத்தும் பொருட்டும் மனிதவள மேலாண்மைத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்துவதற்காக ரூ.288.91 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Advertisement

இந்நடைமுறை செயல்படுத்துவதன் மூலம் கருவு+லங்கள் காகிகதமற்ற அலுவலகங்களாக மாற்றப்படுவதுமட்டுமின்றி, சம்பளம் பெற்று வழங்கும் அலுவலர்கள் இணையவழி மூலமாக பட்டியல்களை கருவூலத்தில் சமர்ப்பித்து, அதே நாளில் வங்கிக் கணக்கில் இந்திய ரிசர்வ் வங்கியின் இ.குபேர் வசதியின் மூலம் தீர்வு செய்ய இயலும்.

மேலும், பயனாளியின் வங்கிக் கணக்கில் பணம் சேரும் வரையிலான ஒவ்வொரு நிலையையும் ஒளிவு மறைவின்றி வெளிப்படையாகவும், எளிதாகவும் அறிந்துகொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

புதிதாக அறிமுகப்படுத்தப்படும் நேரடி இணைய வழிப் பட்டியல் சமர்ப்பிக்கப்படும் முறை மூலம் கருவூலத் துறையில் 1000 டன்கள் காகிதப் பயன்பாடு முற்றிலும் குறைக்கப்படுவதுடன் பணியாளர்களது பணிச்சுமையும் வெகுவாக குறைய வாய்ப்புள்ளது.

தனிச்சிறப்பு மிக்க இத்திட்டம் மூலமாக சுமார் 9 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசுப் பணியாளா;களின் பணிப் பதிவேடுகள் கணினிமயமாக்கப்பட உள்ளன. மேலும், இத்திட்டத்தின் மூலம் அனைத்து அரசுப் பணியாளர்களும் அவரவர் பணிப் பதிவேட்டினை கணினி மற்றும் கைப்பேசி செயலி வாயிலாக தங்களுக்குண்டான கடவுச் சொற்களை பயன்படுத்தி அறிந்துகொள்ள இயலும்.

மேலும், பதிவேட்டில் ஏற்படும் தவறான பதிவுகளை சுயசேவை என்ற முறையை பயன்படுத்தி உரிய அலுவலருக்கு விண்ணப்பித்து, சரிசெய்துகொள்ள முடிவும். மேலும், பணிப் பதிவேட்டின் புதியதாக பதியப்படும் பதிவுகள் அனைத்தும் உரிய பணியாளர்களுக்கு குறுந்தகவலாக தெரிவிக்கப்படும்.

இத்திட்டத்தினால் பணிப்பதிவேடுகள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எடுச் செல்லும் காலவிரையம் குறைவதுடன் காணாமல் போகும் நிலை மற்றும் தீ விபத்து போன்ற நிலையிலிருந்தும், பாதுகாப்பு அளிக்க முடியும். மேலும், பணிப்பதிவேடுகளின் விவரங்கள் கணினியின் மூலம் மேற்கொள்ளப்படுவதால் பதவி உயர்வு கருத்துருக்கள் தயாரித்தல், வருடாந்திர ஊதிய உயர்வு அங்கீகரித்தல், ஊதிய நிர்ணயம், விடுப்பு அங்கீகரிப்பு மற்றும் ஓய்வூதிய கருத்துருக்கள் அனுப்புதல் போன்ற பணிகளை சரியான காலத்தில் மேற்கொள்ள இயலும். இப்புதிய திட்டம் நவம்பர் 18 முதல் நடைமுறைப்படுத்த திட்ட மிடப்பட்டு, பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கு 4 நாட்கள் பயிற்சியும், கருவூல அலுவலர்களுக்கு 2 நாள் பயிற்சியும் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2017-18ஆம் நிதியாண்டில் பெரம்பலூர் மாவட்டத்தில் ரூ.100 கோடி மதிப்பில் ஓய்வூதியமாகவும், ரூ.332 கோடி அரசு ஊழியர்களுக்கு ஊதியமாகவும், மாவட்ட கருவூலம் மற்றும் 4 சார்நிலை கருவூல அலுவலகங்கள் மூலமாக வழங்கப்பட்டுள்ளது.

அரசின் வரவினமாக 106 கோடி ரூபாய் கருவூலங்கள் வழியாக அரசுக் கணக்கிற்கு பெறப்பட்டுள்ளது. எனவே அனைத்து தரப்பினருக்கும் பயனளிக்கும் வகையில் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தை அரசு ஊழியா;கள் அனைவரும் முழுமையாக கற்றுணர்ந்து, சிறப்பாக செயல்பட வேண்டும், என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.அழகிரிசாமி, கூடுதல் இயக்குநர் (மின் ஆளுகை) மகாபாரதி, முதன்மைக் கல்வி அலுவலர் புகழேந்தி, மண்டல இணை இயக்குநர்கள் செல்வசேகர் (கோயமுத்தூர்), பழனிச்சாமி (திருச்சி), மாவட்ட கருவூல அலுவலர் இந்திரா மற்றும் அனைத்து துறை பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
06.07.2026 - 02:22:46
Privacy-Data & cookie usage: