மாற்றுத் திறனாளிகளுக்கு ஒருங்கிணைந்த மருத்துவ முகாம் : பெரம்பலூர் கலெக்டர் தகவல்!

schedule
2023-09-15 | 17:08h
update
2023-09-15 | 17:08h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Integrated Medical Camp for Disabled: Perambalur Collector Information!


பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை ஒருங்கிணைந்த மருத்துவ முகாம் நாளை காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 வரை நடைபெறவுள்ளது.

Advertisement

இம்முகாம்களில் சிறப்பு மருத்துவர்களான கண் மருத்துவர், காது மூக்கு தொண்டை மருத்துவர், எலும்பு முறிவு சிகிச்சை மருத்துவர், மனநல மருத்துவர், குழந்தைகள் நல மருத்துவர் மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஆகியோர் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளை பரிசோதனை செய்து மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்குதல், தேசிய அடையாள அட்டை புதுப்பித்தல், UDID Card பதிவு செய்தல், முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டம் உள்ளிட்ட பதிவுகள் செய்யவுள்ளனர்.

எனவே, மாற்றுத்திறனாளிகள் தங்களுடைய குடும்ப அட்டை நகல் அல்லது புதிய குடும்ப அட்டை (Smart Card) நகல், ஆதார் அட்டை நகல், பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம் – 6 மற்றும் தேசிய அடையாள அட்டை புதுப்பித்து கொள்பவர்கள் ஏற்கனவே வழங்கப்பட்ட தேசிய அடையாள அட்டை ஆகியவற்றுடன் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம், இன்று தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
02.09.2026 - 00:51:42
Privacy-Data & cookie usage: