sportzஇது குறித்து மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

தமிழக அரசு விளையாட்டுத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலமாக கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு விளையாட்டுத் துறையில் மேலும் பல சாதனைகள் படைப்பதற்கு ஏற்ப விஞ்ஞானரீதியான பயிற்சி, தங்குமிடம் மற்றும் சத்தான உணவுடன் கூடிய சிறப்பு விளையாட்டு விடுதிகள் சென்னையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதில் மாணவர்களுக்கான விளையாட்டு விடுதி சென்னை நேரு விளையாட்டரங்கிலும், மாணவியர்களுக்கான விளையாட்டு விடுதி சென்னை நேரு உள் விளையாட்டரங்கிலும் செயல்பட்டு வருகின்றன.

இவ்விளையாட்டு விடுதிகளில் சேர்வதற்கு 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற, பயிலும் மாணவ, மாணவியர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் தனிப்போட்டிகளில் விண்ணப்பிப்பவர்கள் மாநில அளவில் குடியரசு,(அ) பாரதியார் தின விளையாட்டுப் போட்டிகள் (அ) அங்கீகரிக்கப்பட்ட கழகங்கள் நடத்தும் போட்டிகளில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்றிருத்தல் வேண்டும் அல்லது தமிழ்நாடு அணியில் தேர்வு செய்யப்பட்டு தேசிய அளவில் (SGFI) / கழகங்கள் Federation/National Games ( தேசிய விளையாட்டுப் போட்டிகள்) / RGKA நடத்தும் போட்டிகளில் கலந்து கொண்டவர்களும் விண்ணப்பிக்கலாம்.

குழுப் போட்டிகளில் விண்ணப்பிப்பவர்கள் மாநில அளவில் குடியரசு (அ) பாரதியார் தின விளையாட்டுப் போட்டிகள் கழகங்கள் நடத்தும் போட்டிகளில் முதல் இரண்டு இடங்களில் வெற்றி பெற்றிருத்தல் வேண்டும். அல்லது மாநில அளவில் தேர்வு செய்யப்பட்டு தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட இந்திய பள்ளிகள் விளையாட்டுக் கூட்டமைப்பு, தேசிய விளையாட்டுப் போட்டிகள், ஊரக விளையாட்டுப் போட்டிகள் நடத்தும் போட்டிகளில் கலந்து கொண்டவர்களும் விண்ணப்பிக்கலாம்.

கையுந்து பந்து விளையாட்டில் போட்டிகளில் சேர்வதற்கு 185 செ.மீ.க்கு உயரமுள்ள மாணவ ஃ மாணவியருக்கு முன்னுரிமை வழங்கப்படும். 2016-2017-ம் ஆண்டிற்கான சிறப்பு விளையாட்டு விடுதியில் சேர்வதற்கு மாணவர்கள் பிரிவில் தடகளம், கூடைப்பந்து, குத்துச்சண்டை, கையுந்துபந்து, டேக்வோண்டோ, நீச்சல், வாள்சண்டை, துப்பாக்கி சுடுதல், பளுதூக்குதல், ஜூடோ, இறகு பந்து மற்றும் மேசைபந்து உள்ளிட்ட விளையாட்டுகளில் மாணவர்களுக்கான சேர்க்கை நடைபெற உள்ளது.

மாணவிகளுக்கு தடகளம், குத்துச்சண்டை, கையுந்துபந்து, கால்பந்து, டேக்வோண்டோ, நீச்சல், வாள்சண்டை, துப்பாக்கி சுடுதல், பளுதூக்குதல், ஜூடோ, இறகு பந்து, மற்றும் மேசைபந்துஉள்ளிட்ட பிரிவுகளில் மாணவியர்களுக்கான சேர்க்கை நடைபெற உள்ளது.

மேற்கண்ட விளையாட்டு விடுகளில் சேர்வதற்குwww.sdat.tn.gov.in என்ற இணைய தள முகவரியில், சிறப்பு விளையாட்டு விடுதி சார்பான விவரங்களை பற்றி தெரிந்து கொண்டு, விண்ணப்ப படிவத்தினை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 18.02.2016. க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும், மாவட்டத் தலைநகரங்களில் உள்ள மாவட்டட விளையாட்டு அலுவலகத்திலிருந்து விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். மேலும் நிரப்பப்பட்ட விண்ணப்பங்களை மேலாளர், சிறப்பு நிலை விளையாட்டு விடுதி, அறை எண் 76, ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கம், பெரியமேடு, சென்னை – 600 003 என்ற முகவரியில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ 18.02.2016 அன்று மாலை 5.00 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

மாணவ, மாணவிகளுக்கான மாநில தேர்வு 20.02.2016 மற்றும் 21.02.2016 ஆகிய இரண்டு நாட்கள் சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கில் நடைபெறும். தேர்வுப் போட்டியில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவிகள் 20.02.2016 காலை 8.00 மணிக்கு ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கம் சென்னையில் ஆஜராக வேண்டும். எனவே தகுதியுடைய வீரர் மற்றும் வீராங்கனைகள் சிறப்பு விளையாட்டு விடுதியில் சேர்ந்து பயன்பெறலாம், என இவ்வாறு தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!