பெரம்பலூர் கேந்திரியா வித்யாலயா பள்ளிக்கு, தற்காலிக ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு நேர்முகத் தேர்வு!

schedule
2021-09-13 | 15:45h
update
2021-09-13 | 15:45h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Interview for Perambalur Kendriya Vidyalaya School, Temporary Teachers and Staff!

பெரம்பலூர் கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது:

பெரம்பலூர் கேந்த்ரிய வித்யாலயா பள்ளியில் பகுதி நேர தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கான நேர்முகத் தேர்வு இம்மாதம் 15 மற்றும் 16ம் தேதிகளில் நடைபெற இருக்கிறது. முதுகலை, இளங்கலை பட்டதாரி ஆசிரியர்கள், ஆரம்பப் பள்ளி (பிரைமரி) ஆசிரியர்கள், கணினி பயிற்றுநர், மனநல, யோகா, இசை, கைவினை கலை பயிற்சியாளர்கள், மருத்துவர், செவிலியர் போன்ற அனைத்து பணிகளுக்கான தேர்ச்சி தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் நேர்முகத் தேர்வு (Walk in Interview) மூலமாக நடத்தப்படும்.

Advertisement

நிரந்தரப் பணியாளர்கள் விடுப்பு மற்றும் ஏனைய காரணங்களால், காலிப்பணியிடத்திற்கான தற்காலிக வாய்ப்பு ஏற்படும் சமயத்தில், தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பணி வாய்ப்பு தற்காலிகமாக வழங்கப்படும். மேலும், விவரங்களுக்கு பெரம்பலூர் கேந்திரியா வித்யாலயா பள்ளியின் www.perambalur.kvs.ac.in மற்றும் kvsangathan.nic.in என்ற இணைய தளங்களை அணுகி பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
06.06.2026 - 01:57:47
Privacy-Data & cookie usage: