பெரம்பலூர் மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி, நிர்வாகிகள் அறிமுக கூட்டம்

schedule
2019-03-15 | 14:18h
update
2019-03-15 | 14:18h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Introductory Meeting of Perambalur District DMK IT Wing

பெரம்பலூரில் இன்று மாலை மாவட்ட திமுக அலுவலகத்தில், திமுக தகவல் தொழில்நுட்ப அணி, நிர்வாகிகள் அறிமுக கூட்டம், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எல்.ஆர்.ராஜேஸ்வரன், இந்த அணியின் குன்னம் சட்ட மன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார்சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக அசுரன் விஜய் வரவேற்றார். அந்த அணியின் மாநில துணை ஒருங்கிணைப்பாளரும், கிழக்கு மண்டல பொறுப்பாளருமான புதுக்கோட்டை எம்.எம். அப்துல்லா , மாவட்ட செயலாளர்கள் குன்னம் சி.ராஜேந்திரன் (பெரம்பலூர்), எஸ்.எஸ். சிவசங்கர் (அரியலூர்), ஆகியோர் சிறப்புரை ஆற்றினார். இந்த கூட்டத்தில், மாவட்ட அவைத்தலைவர் அ.நடராஜன், ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை(பெரம்பலூர்), நல்லத்தம்பி (வேப்பந்தட்டை), மாநில ஆதிதிராவிட நலக்குழு துணைச் செயலாளர் பா.துரைசாமி , மாநில மருத்துவர் அணி துணைச் செயலாளர் செ.வல்லபன், மாநில கொள்கை பரப்பு துணை செயலாளர் ச.பெருநற்கிள்ளி, மற்றும் பெரம்பலூர் நகர செயலாளர் பிரபாகரன், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் மகாதேவி ஜெயபால், பெரம்பலூர் நகரம், பெரம்பலூர், வேப்பந்தட்டை, வேப்பூர், ஆலத்தூர் ஒன்றிய, குரும்பலூர், அரும்பாவூர், பூலாம்பாடி, லப்பைக்குடிகாட்டை சேர்ந்த பேரூர் நிர்வாகிகள் பலர் திரளாக கலந்து கொண்டனர். மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் ஜே.பச்சமுத்து நன்றி கூறினார்.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
15.08.2026 - 18:22:37
Privacy-Data & cookie usage: