வாக்கு சேகரித்த பெரம்பலூர் தொகுதி வேட்பாளர் எம்.எல்.ஏ தமிழ்ச்செல்வனுக்கு, இஸ்லாமிய பெண்கள் வாழ்த்து!

schedule
2021-03-25 | 18:04h
update
2021-03-25 | 18:08h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Islamic women congratulate Perambalur MLA TamilSelvan for collecting votes!

பெரம்பலூர் தொகுதிக்கு அதிமுக சார்பில் 3வது முறையாக வேட்பாளராக போட்டியிடும், எம்.எல்.ஏ தமிழச்செல்வன் இன்று வேப்பந்தட்டை மேற்கு ஒன்றியத்தில் உள்ள அன்னமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட ஈச்சாங்காடு பகுதியில் இருந்து தேர்தல் பிரச்சாரத்தை ஒன்றிய செயலாளர் சிவப்பிரகாசம் தலைமையில் வாக்குகள் சேகரித்தார். கூட்டணி கட்சிகளான பாமக, பாஜக, உள்ளிட்ட கூட்டணி கட்சியினருடன் திரளாக வாக்குகள் சேகரித்தார். பின்னர், அரசலூர், அன்னமங்கலம், விசுவகுடி, முகமது பட்டினம், பிள்ளையார்பாளையம், தொண்டைமாந்துறை, விஜயபுரம், அய்யர்பாளையம், அ.மேட்டூர், கொட்டாரகுன்று, மலையாளப்பட்டி, அரும்பாவூர், பூலாம்பாடி, பெரியம்மாபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வாக்குகளை சேகரித்தார். முன்னதாக அன்னமங்கலத்தில் பேசிய வேட்பாளர் தமிழச்செல்வன், விசுவக்குடி நீர்த்தேக்கத்தில் தனி வாய்க்கால் அமைத்து, பெரிய ஏரிக்கு தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகளின் கோரிக்கையை தற்காலிக கொள்முதல் நிலையம் அமைத்து கொடுத்துள்ளேன், அதையும் நீட்டிப்பு கொடுத்துள்ளதோடு, வரும் நாட்களில் நிரந்தர நிலையம் அமைக்க நடவடிக்கை எடுப்பேன் எனவும், தெரிவித்தார். விசுவக்குடி கிராமத்திற்கு வாக்கு சேகரிக்க சென்ற வேட்பாளருக்கு இஸ்லாமியர்கள் சார்பில் சால்வை அணிவிக்கப்பட்டு, வாழ்த்துக்கள் தெரிவித்தனர். அதோடு, வீதிகளில் இருந்து மூதாட்களிடம் வாக்குகளை சேகரித்த போது காலில் விழுந்து ஆசி பெற்றார். தான் பெற்ற பிள்ளையாக கருதுவதாக அந்த பெண்கள் அவர் வெற்றி பெற வாழ்த்துகள் தெரிவித்தனர்.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
14.06.2026 - 22:44:42
Privacy-Data & cookie usage: