பெரம்பலூர் மாவட்ட சிறுபான்மையினருக்கான கடன் விண்ணப்பங்கள் வழங்கல்

schedule
2018-01-11 | 08:21h
update
2018-01-11 | 09:53h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Issuance of applications under the Loan Scheme for Perambalur District Minorities

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்ட அரங்கில் நேற்று சிறுபான்மையினருக்கான கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Advertisement

இதில் இச்சிறுபான்மையின பயனாளிகளுக்கு, டாம்கோ கடன் விண்ணப்பங்களை பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் பெ.பாண்டியன் வழங்கினார்.

பயனாளிகளிடம் டாம்கோ மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் பற்றியும், கடன் பெற தேவையான தகுதிகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தனர். பின்பு, இதில் கலந்துகொண்ட 82 சிறுபான்மையின பயனாளிகளுக்கு டாம்கோ கடன் விண்ணப்பங்களை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் உமாமகேஸ்வரி, கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் பாண்டித்துரை மற்றும் சிறுபான்மையினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
08.09.2026 - 08:05:13
Privacy-Data & cookie usage: