வானிலை மாற்றத்தால் பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று மாலை பல்வேறு இடங்களில் மழை!

schedule
2022-06-14 | 18:07h
update
2022-06-14 | 18:10h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

It will rain at various places in Perambalur district this evening due to weather change.

Advertisement

பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று மாலை வானிலை மாற்றத்தன் காரணமாக பல்வேறு இடங்களில் தற்போது மழை பெய்து வருகிறது.

மேற்கு திசை காற்றின் காரணமாக திருச்சி, கரூர், பெரம்பலூர், புதுகை உள்ளிட்ட தமிழகத்தின் 18 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும் என சென்னை வானிலை அறிவித்த நிலையில், இன்று மாலை பலத்த மழை பெய்யதது. காலை முதல் மதியம் வரை வைகாசி வெயில் வாட்டிய நிலையில் மாலையில் பெய்த மழையால் குளிர்ச்சியான காற்று இதமாக வீசியது.

பெரம்பலூர் நகரில் விட்டு விட்டு பலத்த மழை பெய்த நிலையில், மாவட்டத்தின் பிறபகுதிகளான எளம்பலூர், வடக்குமாதவி, சோமண்டாபுதூர், கோனேிப்பாளையம், எசனை, ஆலம்பாடி, செஞ்சேரி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரவு முழுவதும் பலத்த காற்றுடன் மழை பெய்து இடி மின்னலுடன் வருகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
12.06.2026 - 03:15:04
Privacy-Data & cookie usage: