ITI Students Admission Online : Perambalur Collector Info!

பெரம்பபலூர் கலெக்டர் வெங்கடபிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

2022-ஆம் ஆண்டில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரவும் அரசு உதவி பெறும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் சுயநிதி தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்ந்திடவும் இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறன்றன.

www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் பதிவு செய்ய வேண்டும். இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க மாணவர்களுக்கு உதவிடும் வகையில் மாநிலம் முழுவதும் அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகங்கள் ஆகியவற்றில் சேர்க்கை உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இம் மையங்களின் பட்டியல் மேற்குறித்த இணையதள முகவரியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க விரும்புபவர்கள் எட்டாம் வகுப்பு/பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணத் தொகையான ரூ.50 விண்ணப்பதாரர் டெபிட், கிரிடிட், நெட் பேங்கிங் ஜி-பே வாயிலாக செலுத்தலாம். 24.06.2022 அன்று முதல் இணையதளம் வாயிலாக விண்ணப்பம் பதிவு செய்யலாம். 20.07.2022 அன்று விண்ணிப்க கடைசி நாள். மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும் இணையதள கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியல் மற்றும் கலந்தாய்வு குறித்த விவரங்கள் கடைசி தேதிக்கு பிறகு இதே இணையதளத்தில் வெளியிடப்படும்.

அரசு தொழிற்பயிற்சி நிலையம் பெரம்பலூர், மின்னஞ்சல் முகவரி: gitiperambalur@gmail.com அலைபேசி எண்: 9499055881 &8072345080. அரசு தொழிற்பயிற்சி நிலையம் ஆலத்தூர் மின்னஞ்சல் முகவரி: gitialathurperambalur@gmail.com அலைபேசி எண்: 9499055884, மாவட்ட திறன் பயிற்சி அலுவலகங்கள் மின்னஞ்சல் முகவரி: dstoperambalur@gmail.com அலைபேசி எண்: 9488451405 தொழிற்பயிற்சி நிலைய சேர்க்கைக்காக விண்ணப்பத்தினை பூர்த்தி செய்வதில் ஏதேனும் ஐயம் ஏற்படும் நேர்வில் மேற்காணும் சேர்க்கை உதவி மையம் மின்னஞ்சல் முகவரியிலும் அலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!