பெரம்பலூரில் ஜெ. முதலாம் ஆண்டு நினைவு தின மவுன அஞ்சலி ஊர்வலம்

ஆயிரக்கணக்கானேர் பங்கேற்பு

schedule
2017-12-05 | 10:14h
update
2026-07-04 | 10:20h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

J. in Perambalur First Anniversary Memorial Day Tribute – Thousands Participation

பெரம்பலூரில், தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் முதலாம் ஆண்டு நினைவு மவுன ஊர்வலம் பெரம்பலூர் மாவட்ட செயலாளரும், குன்னம் தொகுதி எம்.எல்.ஏவுமான ஆர்.டி.ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.

Advertisement

பெரம்பலூர் பழைய நகராட்சி அலுவலகத்திலிருந்து மாபெரும் மவுன ஊர்வலம் புறப்பட்டு, பழைய பேருந்து நிலையம் , காமராஜர் வளைவு, மதனகோபாலபுரம், வெங்கடேசபுரம், பாலக்கரை உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்று புதிய பேருந்து நிலையத்தை அடைந்தது. அங்கு இருந்த ஜெ.ஜெயலலிதாவின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர், அங்கு வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் படத்திற்கு மலர் தூவியும் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியி்ல் பெரம்பலூர் எம்.எல்.ஏ, இரா.தமிழ்ச்செல்வன், சிதம்பரம் தொகுதி எம்.பி. சந்திரகாசி, ஒன்றிய செயலாளர்கள் கர்ணன் (ஆலத்தூர்), சிவப்பிரகாசம் (வேப்பந்தட்டை) மற்றும் அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்ட இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆலத்தூர், வேப்பந்தட்டை, வேப்பூர், பெரம்பலூர் ஒன்றியங்களில் இருந்து கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
04.07.2026 - 10:21:21
Privacy-Data & cookie usage: